பாகிஸ்தானே அழிஞ்சிடுமோ? போனை தவிர்த்த மோடி! பாலகோட் தாக்குதலில் அஞ்சிய இம்ரான் கான்! பரபர தகவல்
டெல்லி: 2019ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சார்பில் பாகிஸ்தானின் பாலகோட் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயந்துபோன் அப்போதைய பிரதமர் இம்ரான் கான் இரவோடு இரவாக பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் பேச முயன்ற நிலையில் இந்தியா அதற்கு சொன்ன பதில் குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
2019 பிப்ரவரி 14.. இந்தியாவின் கருப்பு தினங்களில் ஒன்றாக உள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் செல்லும் வாகனங்களை குறிவைத்து அன்றயை தினம் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா மக்களையும் கலங்க வைத்தது.

இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை என்பது தீவிரமானது. புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தான் இந்தியா சார்பில் பாகிஸ்தான் மீது விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை சார்பில் பாகிஸ்தானின் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த வேளையில் மிக் 21 ரக விமானத்தில் விங்க் காமாண்டோ அபிநந்தன் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இருப்பினும் அவர் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்து அந்நாட்டினரிடம் சிக்கினார். அதன்பிறகு 2 நாட்களுக்கு பிறகு அவர் மீட்கப்பட்டார்.
இந்நிலையில் தான் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக பணியாற்றி ஓய்வு பெற்ற அஜய் பிசாரியா தற்போது புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். Anger Management: The Troubled Diplomatic Relationship என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் தனது 35 ஆண்டுகால பணி அனுபவம் பற்றிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். இதில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக பணியாற்றியபோது இருநாடுகள் இடையே நடந்த மோதல் குறித்தும் முக்கிய தகவலை எழுதியுள்ளார்.
கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலகோட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி இந்திய விமானப்படையின் விங் கமாண்டோவாக இருந்த அபிநந்தன் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை வீழ்த்தினார். ஆனால் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்தார். இதையடுத்து அபிநந்தன் பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டார். இவர் 2 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த வேளையில் அவரை மீட்க இந்தியா பல்வேறு ஏற்பாடுகளை செய்தது. இந்திய விமானப்படை விமானத்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா தயாராக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இது மோசமான ஒன்றாகும். இருநாடுகளின் பிரச்சனைகளை சரிசெய்ய இந்தியாவுக்கு பல நாடுகள் சிறப்பு தூதர்களை அனுப்ப முன்வந்தது. சீனாவும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு தலா ஒரு அமைச்சர்கள் என 2 அமைச்சர்களை அனுப்ப பரிந்துரை செய்தது. ஆனால் இந்தியா இந்த ஆபர்களை மறுத்தது. இவை அனைத்தையும் இந்தியா பணிவுடன் நிராகரித்தது.
பாலகோட்டில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்களுக்கு அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் தெஹ்மினா ஜான்ஜுவா தகவல் தெரிவித்தார். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை நோக்கி 9 ஏவுகணைகள் தயாராக இருப்பதாகவும், இந்த ஏவுகணைகள் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானை தாக்கலாம் எனவும் குறிப்பிட்டார். மேலும் அவர் இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என நம்மிடம் கேட்டு கொண்டார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகியவையின் ஆலோசனை கூட்டத்துக்கு இது வழிவகுத்தது.
மேலும் இந்தியா போர் தொடுத்து விடும் என அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயந்தார். இதையடுத்து அவர் பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி 2019 பிப்ரவரி 27 ம் தேதி இரவு நேரத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். இதுதொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்த சோஹைல் முகமது எனக்கு போன் செய்தார். பிரதமர் மோடியுடன், இம்ரான் கான் பேச விரும்புவதாக தெரிவித்தார்.
நான் பேசிவிட்டு தகவல் தெரிவிப்பதாக கூறினேன். அதன்பிறகு மீண்டும் சேஹைல் முகமதுவை தொடர்பு கொண்டு பேசினேன். இந்த வேளையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியாது. ஏதாவது முக்கிய செய்தி இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம் என கூறினேன். அதன்பிறகு பாகிஸ்தானிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மறுநாளே இம்ரான் கான் அபிநந்தனை விடுவிப்பதாக அிவித்தார். அதன்பிறகு இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. இது இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்'' என தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications