லியோவை விடுங்க.. இவர் தான் நிஜ லைஃப் "விக்ரம்"கமல்! 19 வருடம் உயிரிழந்ததாக ஏமாற்றிய Ex கடற்படை வீரர்
டெல்லி: சுமார் 29 ஆண்டுகள் தான் உயிரிழந்ததாக மொத்த போலீசாரையும் நம்ப வைத்த பலே கில்லாடி ஒருவரை இப்போது போலீசார் தட்டி தூக்கியுள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விக்ரம் திரைப்படத்தில் நடிகர் கமல் தான் மரணமடைந்துவிட்டதாக ஊரை ஏமாற்றுவார். அதேபோல டெல்லியில் ஒருவர் கொலை வழக்கில் இருந்து எஸ்கேப் ஆக 20 ஆண்டுகள் தான் மரணமடைந்துவிட்டதாக அனைவரையும் ஏமாற்றியுள்ளார்.

கொலை வழக்கில் இருந்து தப்பிக்கத் தான் உயிரிழந்தது போல செட்அப் செய்துள்ளார். இதற்காக அவர் இரண்டு அப்பாவி இளைஞர்களை உயிருடன் கொளுத்தியுள்ளார். இத்தனை காலம் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.
கொலை வழக்கு: கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு டெல்லியில் வசித்து வந்தவர் பாலேஷ் குமார். இந்தியக் கடற்படையில் பணியாற்றி இருந்த இவர், விருப்ப ஓய்வைப் பெற்றார். அதன் பிறகு இவர் பல்வேறு வேலைகள் செய்து வந்தார். அப்போது ஒரு கொலை வழக்கில் இவர் சிக்கியுள்ளார். அதில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க 18 நாட்கள் இவர் தலைமறைவாக இருந்தார். அப்போது தான் கடந்த 2004இல் லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் இவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. முற்றிலும் எரிந்த நிலையில், இருந்த சடலமும் கைப்பற்றப்பட்டது.
ஆனால், அவர் உண்மையில் சாகவில்லை. தனது பெயரை "அமன் சிங்" என்று மாற்றிக் கொண்ட அவர், தனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். முதல் சில ஆண்டுகள் லாரி டிரைவராக பல்வேறு இடங்களில் வேலை செய்த அவர், ஆதார் காட்டு, ரேஷன் கார்டு என அனைத்தையும் தனது புதிய பெயரில் வாங்கியுள்ளார். போலீசாரின் சந்தேகம் எல்லாம் போன பிறகு, 2011இல் டெல்லி நஜாப்கருக்கு வந்த அவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் உடன் அழைத்துக் கொண்டார்.
ஜாலி வாழ்க்கை: கடந்த 12 ஆண்டுகளாகச் சந்தோஷமாக வாழ்ந்த இந்த கொலையாளி தான் இப்போது கைதாகியுள்ளார். இது குறித்து போலீசார் சிறப்பு ஆணையர் ரவீந்திர சிங் யாதவ் கூறுகையில், "பல ஆண்டுகள் கடந்த பிறகு, இனியும் போலீசார் நம்மைத் தேடி வர மாட்டார்கள் என்ற நம்பிக்கை வந்த பிறகு, மனைவி, குழந்தைகளும் அவருடன் சென்று வசிக்கத் தொடங்கியுள்ளனர். அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டு புதிய அடையாளத்தில் இருந்தாலும் அவரது மனைவியும் குழந்தைகளும் இதுபோல எதையும் செய்யவில்லை" என்றார்.
டெல்லியில் ரியல் எஸ்டேட் டீலராக இவர் இருந்துள்ளார். இவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரது மனைவி தலைமறைவாகிவிட்டார். இதனால் எங்கு அவருக்கும் இவரது குற்றங்களிலும் சதியிலும் பங்கு என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக் குற்றவாளி ஒருவர் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்த நிலையில், அதன் அடிப்படையிலேயே இவரைக் கைது செய்துள்ளனர்,
வசமாகச் சிக்கினார்: அமன் சிங் உண்மையில் பாலேஷ் குமார் தான் என்பது உறுதி செய்தவுடன் போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் மீது ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், குற்றச் சதி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2004இல் பாலேஷ் குமார் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் குஷி ராம் என்பவரை பாலேஷ் குமார் கொலை செய்துவிடுகிறார். உடனடியாக தலைமறைவான பாலேஷ் குமார், போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஒரு பிளான் போடுகிறார். அதன்படி லாரியில் டிரிப் அடிக்க வேண்டும் என இருவரை டெல்லி புறநகரில் இருந்து வேலைக்குக் கூட்டி வருகிறார். தனது சகோதரரின் லாரியை எடுத்துக் கொண்டு அந்த இருவருடன் ஜோத்பூர் செல்கிறார்.
இரட்டை கொலை: போகும் வழியில் கடந்த 2004 மே 1ஆம் தேதி அவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். அவர்கள் குடித்துவிட்டு போதையான நேரம் பார்த்து லாரியை அப்படியே பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுகிறார். லாரி முழுமையாக எரிந்ததால் போலீசாரால் அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை. இருப்பினும், பாலேஷ் குமாரின் குடும்பத்தினர் நேரில் வந்து பார்த்து, இது அவருடைய சடலம் தான் எனக் கூறியதால் போலீசாரும் நம்பிவிட்டனர். மற்றொரு சடலம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இருப்பினும், முதலில் பாலேஷ் குமார் உயிரிழந்துவிட்டதாகவே அனைவரும் நினைத்தனர். கடற்படையில் இவர் பணியாற்றி இருந்ததால் பென்ஷன் அவரது மனைவிக்குப் போனது. அது மட்டுமின்றி. இவர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த லாரிக்கும் கூட இன்சூரன்ஸை பெற்றுவிட்டார்கள். அந்தளவுக்கு இவர் கொலையை நுணுக்கமாகத் திட்டமிட்டுள்ளார். அப்போது எப்படியோ தப்பியிருந்தாலும் இப்போது வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். இப்போது இவர் மீது இந்த இரட்டை கொலை வழக்கும் சேர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனைவி தலைமறைவு: அவரது மனைவி தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இதில் பாலேஷ் குமார் குடும்பத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications