மோடி, அமித் ஷா மேடை மேடையாக பேசியதை! ஒரே பேச்சில் புரட்டி போட்ட பிரியங்கா !காங்கிரஸின் மாஸ்டர்பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்துக்களின் தாலியை காங்கிரஸ் பறிக்க பார்க்கிறது என்று பிரதமர் மோடி வைத்த விமர்சனத்திற்கு காங்கிரசின் பிரியங்கா காந்தி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அவரின் பேச்சை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முக்கியமான சில முடிவுகளை எடுத்துள்ளதாம்.

நேற்று பெங்களூரில் பேசிய ப்ரியங்கா காந்தி, "உங்கள் தங்கத்தை, உங்கள் தாலியை காங்கிரஸ் பறிக்க விரும்புகிறது என்று மோடி கூறுகிறார். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. உங்கள் தங்கத்தையோ உங்கள் மங்களசூத்திரத்தையோ யாராவது கொள்ளையடித்திருக்கிறார்களா? போர் நடந்தபோது இந்திரா காந்தி என் தாயின் மங்களசூத்திரத்தை இந்த நாட்டிற்காக தியாகம் செய்தேன்.

How Priyanka Gandhi speech is becoming a huge issue for BJP and PM Modi in Lok Sabha elections 2024

400 இடங்களை கடந்து வெல்வோம்.. 400ஐ கடந்து அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பிரதமர் கூறுகிறார்... சில சமயங்களில் அவரை நாங்கள் அசிங்கமாக பேசுவதாக மோடி கூறுகிறார், அல்லது மதம் பற்றி பேசுகிறார். அவர் என்றாவது மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசி உள்ளாரா?

காங்கிரஸ் கட்சி பெண்களின் தங்கம், தாலியை பறிக்கும் என தேர்தலுக்காக பிரதமர் மோடி பேசி வருகிறார். போராட்டத்தின்போது உயிரிழந்த 600 விவசாயிகளின் மனைவிகளுடைய தாலி குறித்து பிரதமர் கவலைப்பட்டாரா? மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலை பட்டாரா?

காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது யாரேனும் உங்கள் தங்கத்தை, தாலியை பறித்தார்களா? என்னுடைய பாட்டி இந்திரா காந்தி, போரின்போது இந்த நாட்டுக்காக தனது தங்கத்தை கொடுத்தார். எனது தாயார் நாட்டுக்காக தாலியை தியாகம் செய்தார், என்று ப்ரியங்கா காந்தி பேசி உள்ளார்.

காங்கிரஸ் பிளான்: இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சிக்கு மாநில அளவில் பல்வேறு நிர்வாகிகள் முக்கிய கோரிக்கை வைத்துள்ளாராம். மோடியின் தாலி பேச்சு இந்துக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை தடுக்க ஒரே வழி பிரியங்காவின் இந்த பேச்சுதான்.

இதை அவர் மேடைக்கு மேடை பேச வேண்டும். மோடியின் பொய்யான பேச்சுக்கு பிரியங்கா சரியான பதிலடி கொடுத்துள்ளார். ஆனால் இது போதாது. இதை அவர் ராஜஸ்தான், பீகார், உபியில் பேச வேண்டும். அதுவே சரியான பதிலடியாக இருக்க முடியும். மோடி பேச்சை அப்போதுதான் மட்டுப்படுத்த முடியும்.

மோடி எமோஷனை தூண்டுகிறார். இதற்கு ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தால் பயன் அளிக்காது. இதற்கு எமோஷனலாக பதிலடி கொடுக்க வேண்டும். ப்ரியங்கா பாணியே சரி என்று காங்கிரஸ் நிர்வாகிகள் மேலிடத்திற்கு கோரிக்கை வைத்து உள்ளனராம்.

மோடி என்ன பேசினார்?: முக்கியமாக பிரதமர் மோடி நேரடியாக மத ரீதியாக பேச தொடங்கி உள்ளார். ராஜஸ்தானில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,​​தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

கடுமையான சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+