Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போர்க்குணம் கொண்ட டாடா.. ஒருபக்கம் முதல்வர், மறுபக்கம் தீவிரவாதிகள்.. நேர்மையை நிலைநாட்டியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அசாமில் தீவிரவாதம் உச்சகட்டத்தில் இருந்த காலகட்டத்தில் டாடா நிறுவனத்துக்கும், உல்ஃபா தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பிருப்பதாக அசாம் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தா குற்றம் சாட்டினார். அதற்கடுத்த பிரச்னையாக டாடா டேப்ஸ் தொலைபேசி உரையாடல் கசிந்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. நெருக்கடியான அந்த காலகட்டத்தை ரத்தன் டாடா எப்படி போர்க்குணத்துடன் சமாளித்தார் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

1990 காலகட்டத்தில் அசாமில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் இருந்து அசாம் சுதந்திரம் பெற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது உல்ஃபா அமைப்பு. அமைப்பின் செயல்பாடுகளுக்காக தேயிலை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பறித்து வந்துள்ளனர்.

ratan tata assam

அந்த காலகட்டங்களில் உல்ஃபா தீவிரவாதிகளால் கடத்தல், கொலை என பல்வேறு சம்பவங்களைக் கண்டது அசாம். குறிப்பாக தொழிலதிபர்களுக்கு அது மிகவும் நெருக்கடியான காலகட்டமாக இருந்தது. தேயிலைத் தோட்டங்கள், வணிக நிறுவனங்களில் இருந்து பணத்தைப் பறிக்கும் சம்பவங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் உல்ஃபா தீவிரவாதிகள்.

அசாம் மாநிலத்தில் தீவிரவாதம், வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் பிரபுல்ல குமார் மஹந்தாவின் அரசாங்கம் கடும் அழுத்தத்தில் இருந்தது. தீவிரவாதிகளிடம் இருந்து பொதுமக்களை காக்க முடியாத காவல் துறையினர் தீவிரவாதிகளுக்குப் பணம் கொடுத்தவர்களைத் துன்புறுத்தும் செயலில் ஈடுபட்டனர்.

இந்த கொந்தளிப்பான காலகட்டத்தில்தான் டாடா குழுமத்தின் அப்போதைய தலைவர் ரத்தன் டாடா மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கினார். அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் மிகப்பெரிய தேயிலை நிறுவனமான டாடா டீ, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான உல்ஃபாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக அன்றைய அசாம் முதல்வர் புரபுல்ல குமார் மஹந்தா குற்றம் சாட்டினார்.

வணிக நிறுவனங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்குவது தேச விரோதச் செயல் என்று கூறி ரத்தன் டாடாவுக்கும், உல்ஃபா தீவிரவாதிகளுக்கம் உள்ள தொடர்புகள் குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தினார் முதல்வர். 1990இல் இந்தியா டுடே வெளியிட்டிருந்த தகவலின்படி, அசாமில் உல்ஃபா அமைப்பினர் தேயிலைத் தோட்டங்கள் மீது வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். அதில் பெரும்பாலானவை தனியார் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களாகவே இருந்தன.

ratan tata assam

தீவிரவாதிகளுக்கு பயந்து பல தேயிலை நிறுவனங்கள் தீவிரவாதிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தன. ஆனால், டாடா டீ நிறுவனம் தீவிரவாதிகளுக்கு எந்தவிதமான பணமும் கொடுக்கவோ அல்லது நிதி உதிவியோ வழங்கக் கூடாது என்று பிடிவாதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருந்தாலும், அசாம் அரசால் டாடா டீ நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர்.கே.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா டெல்லிக்கு விரைந்ததாக 1997 இல் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அசாம் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தா ஆளும் கட்சியின் முக்கிய அதிகார மையங்களில் ஒன்றான மேற்கு வங்கப் பிரதிநிதி ஜோதி பாசுவிடமிருந்து முதல்வருக்கு அழைப்பு வந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல் வெளியாகி சரியாக 20 நாட்களுக்குப் பிறகு அனைத்துப் பிரச்னைகளையும் சரிசெய்யும் வகையில், மும்பையில் ஜெத்மலானியின் இல்லத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற பிரச்னையில் சிக்கியிருந்த டாடாவுக்கு அடுத்த பிரச்னையாக டாடா டேப்ஸ் என்ற தொலைபேசி உரையாடல் ஒன்று கசிந்து சர்ச்சைக்குள்ளானது.

உல்ஃபா அமைப்புக்கு டாடா நிறுவனம் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை இந்தியன் எக்ஸ்பிஸ் வெளியிட்டது. நஸ்லி வாடியா, கேஸ்யப் மஹிந்திரா, ரத்தான் டாடா உள்ளிட்ட பல உயரிய பதவியில் உள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட அந்த உரையாடல் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

அந்த உரையாடல்களில், அசாம் அரசாங்கத்துடன் தங்களுக்குள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு டாடாக்கள் மத்திய அரசின் உதவியை நாடுவதாகவும், தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியதாக கூறி காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் டாடா டீ நிறுவனத்தின் மூத்த நிர்வாகியன ப்ரோஜென் கோகோய் இருக்கும் இடம் பற்றி தங்களுக்குத் தெரியும் என்றும், அசாம் அரசுடன் தங்களுக்குள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

டாடா டீ நிறுவனம் சார்பில் அசாம் மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில், அந்த முகாமில் வந்த உல்ஃபா தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்த பிரணதி தேகா என்ற பெண்ணை மும்பைக்கு மருத்துவ சிகிச்சைக்கா அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், இதனை மறுத்த கோகோய் அவர் தீவிரவாதி என்பதே தனக்குத் தெரியாது. பொதுமக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்திலேயே இந்த முகாம் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, டாடா டீ நிர்வாகிகளான எஸ்.எஸ்.டோக்ரா, கித்வாய், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். பின்னர், தீவிரவாதிகளுக்கு உதவியதாகக் கூறி டோக்ராவை கைது செய்தனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண்பதற்காக ரத்தான் டாடா மற்றும் டாடா டீ நிர்வாக இயக்குநர் கிருஷ்ணகுமார் டெல்லியில் முதல்வர் மஹந்தாவை சந்தித்துப் பேசினர்.

உல்ஃபா அமைப்பினருடன் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அவரிடம் மறுத்துள்ளனர். மேலும், தீவிரவாதிகளுக்கு நிறுவனம் சார்பில் எந்தவொரு நிதியுதவியும் வழங்கவில்லை என்று வலியுறுத்தினர். மேலும், அசாமில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொடர்ந்து மருத்துவ உதவிகளையும் செய்து வந்தனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகளும், புயல்கள் வீசப்பட்டு இருந்தபோதும் சமூக நலனுக்கான நடவடிக்கையில் மட்டுமே டாடா நிறுவனம் செயல்பட்டு வந்தது. தீவிரவாதிகளை ஆதரிக்கும் நோக்கம் எங்களுக்கில்லை என்று டாடா கூறினார். இறுதியில், ரத்தன் டாடாவும், டாடா குழுமமும் இந்தப் பிரச்னையில் இருந்து தங்களுடைய அதே நல்ல பெயருடன் வெளியே வந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+