பாதுகாப்பு வளையம் தாண்டி தாக்குதல் எப்படி சாத்தியமானது? நாடாளுமன்ற பாஸ் வாங்குவது எப்படி தெரியுமா?
டெல்லி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஆட்சி பீடம் நாடாளுமன்றம். அதற்கு உள்ளே எத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். ஐடி கார்டு சோதனை, வெடிகுண்டு சோதனை என பல சோதனைகளையும் தாண்டி இரண்டு பேர் பார்வையாளர் மாடத்திலிருந்து மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்துள்ள இடத்தில் எப்படி குதித்தார்கள் என்ற ஆச்சரியம் பலருக்கும் இருக்கலாம்.
குதிப்பதை கூட புரிந்து கொள்ள முடியும், ஆனால் கையில் வண்ணமயமான புகைகளை கக்கக்கூடிய குண்டுகளை எப்படி வைத்திருந்தார்கள் என்பது மேலும் பல கேள்விக்கணைகளை எழுப்பும் விஷயமாகும்.

முதலில் பார்வையாளர்கள் எப்படி நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம். நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ, பார்வையாளர்கள் மாடத்தில் அமர்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் தான் பாஸ் கொடுக்கிறார்கள். எம்எல்ஏக்கள் அல்லது எம்பிக்கள் அலுவலகத்திற்கு சென்று பாஸ் வாங்குபவர்கள் ஒரு பக்கம் என்றால், நாடாளுமன்ற வளாகத்தில் அவர்களை சந்தித்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.
சில நேரங்களில், பத்திரிகையாளர்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து பாஸ் வாங்கி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுப்பதும் உண்டு. மக்களவை உறுப்பினர்களோ, பத்திரிக்கையாளர்களோ, பாஸ் பெறுபவர்களின் பின்புலங்களை முழுமையாக ஆராய்ச்சி செய்ய முடியாது. அப்படியான நேரத்தில் தான் தந்திரமாக பாஸ் பெற்றுக் கொள்ளும் நபர்கள் திடீரென சட்டசபை அல்லது நாடாளுமன்றத்திற்குள் கலாட்டாவில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. பார்வையாளர் மாடத்தில் அமர்ந்தபடி திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்புவதை பல்வேறு சட்டசபைகளில் நாம் பார்த்திருக்கிறோம்.
பார்வையாளர் மாடம் மக்கள் பிரதிநிதிகள் அமர்ந்து இருக்கக்கூடிய இருக்கைக்கும் மேலே இருப்பதால் அங்கிருந்து தாவிக் குதிப்பதும் எளிதான விஷயமாக இருக்கிறது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியபடி, விஷமிகள் வீசிய குண்டில் இருந்து வந்த புகை, தீமை விளைவிக்கக்கூடியது கிடையாது. எனவே நாடாளுமன்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள மெட்டல் டிடெக்டர் கருவிகளில் அதை கண்டுபிடிக்க இயலவில்லை என்று தெரிகிறது. வெடி மருந்துகளாக இருந்திருந்தால் பாதுகாப்பு கருவிகள் அதை கண்டுபிடித்து எச்சரிக்கை செய்திருக்கும். இருப்பினும் உருண்டை வடிவத்தில் ஒரு பொருளை உள்ளே எடுத்துச் செல்லும்போது அதன் மீது சந்தேகம் வந்து சோதித்து பார்த்திருக்க வேண்டியது பாதுகாவலர்கள் கடமையாகும். இந்த இடத்தில் பாதுகாப்பு குளறுபடி நடந்திருக்கிறது என்பதுதான் அடிப்படை விஷயமாக உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications