திடீரென புகுந்த கடற்கொள்ளையர்கள்.. சரியான நேரத்தில் உதவிய இந்திய கடற்படை.. திக்திக் நிமிடங்கள்
டெல்லி: மத்திய கிழக்குப் பகுதியில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் அதிகரிக்கும் நிலையில், இன்று கடத்தப்பட்ட மற்றொரு கப்பலுக்கு இந்தியக் கடற்படை சரியான நேரத்தில் உதவியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போருக்குப் பிறகு மத்திய கிழக்குப் பகுதி அருகே வரும் கப்பல்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் அந்த கப்பல்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த நேரத்தில் இந்தியக் கடற்படை அவர்களுக்கு உதவி வருகிறது. இதற்கிடையே கடற்கொள்ளையர்களின் மற்றொரு கடத்தல் முயற்சியை இந்தியக் கடற்படை முறியடித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
உதவி: சோமாலியா கடற்கரையில் இலங்கை மீன்பிடி இழுவை படகைக் கடற்கொள்ளையர்கள் கடத்த முயன்றுள்ளனர். அப்போது சரியான நேரத்தில் சென்ற இந்தியக் கடற்படை அவர்களுக்கு உதவியிருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் முறியடிக்கப்பட்ட மூன்றாவது கடத்தல் முயற்சி இதுவாகும். இந்தியக் கடற்படை அளித்த முக்கிய தகவல்களின் உதவியுடன் சீஷெல்ஸ் கடற்படையே கடத்தப்பட்ட கப்பலை செஷல்ஸில் அருகே தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அந்த படகில் ஆறு பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போது அந்த கப்பல் சீஷெல்ஸில் உள்ள மாஹேவுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படை: இலங்கை நாட்டில் பதிவு செய்யப்பட்ட லொரென்சோ புத்தா 04 கப்பல் மொகடிஷு கடற்கரையில் மூன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் இந்தியக் கடற்படை அதன் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சாரதாவை உதவிக்கு அனுப்பி உள்ளது. மேலும் கடத்தப்பட்ட அந்த கப்பலைக் கண்டுபிடிக்க சீ கார்டியன் ட்ரோன்களையும் அனுப்பியுள்ளது.
கொள்ளையர்கள்.. சரியான நே
சரியான நேரத்தில் இந்தியக் கடற்படை முக்கியமான தகவல்களைப் பகிர்ந்த நிலையில், இலங்கை மற்றும் சீஷெல்ஸ் அதிகாரிகள் இணைந்து கடத்தப்பட்ட கப்பலை மீட்டுள்ளனர். இது குறித்து இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இலங்கை மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் இந்தியக் கடற்படை செஷல்ஸ் பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கடற்படையுடன் இணைந்து துரிதமாக நடவடிக்கை எடுத்ததில் கடத்தப்பட்ட கப்பல் வெற்றிகரமாக இடைமறித்து மீட்கப்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஷாக் சம்பவம்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தொடங்கியதில் இருந்து கப்பல்கள் மீதான தாக்குதல்களும் கடத்தல்களும் இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வருகின்றன. ஏடன் வளைகுடா பிராந்தியத்தில் ஹவுதி குழு அங்குச் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்களையும் ராக்கெட் தாக்குதல்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். மறுபுறம் சோமாலி கடல் பகுதிகள் கடற்கொள்ளையர்கள் இது போன்ற சம்பங்களிலும் ஈடுபடுகிறார்கள். அந்த பக்கம் வரும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கும் கடற்கொள்ளையர்கள் கப்பல்களைக் கடத்தும் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள்.
முன்னதாக நேற்று திங்கள்கிழமை தான் இந்தியப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா, சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையில் 11 கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலான எஃப்வி அல் நயீமியை மீட்டது. அதில் இருந்த 19 பாகிஸ்தான் மாலுமிகள் மற்றும் பணியாளர்களைப் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மற்றொரு இந்தியப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம், ஏடன் வளைகுடாவில் ஏவுகணையால் தாக்கப்பட்ட வணிகக் கப்பலுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications