சென்னை ஏர்போர்ட் மொத்தமா மாற போகுது.. பயணிகளுக்கு செம மாஸ் நியூஸ்! இனி ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் ஆகாது
டெல்லி: வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்புவோர் இம்மிகிரேஷன் பிராசஸை முடிக்கக் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை ஆகிறது. இதற்கிடையே இம்மிகிரேஷன் செயல்முறையை வெறும் சில நொடிகளில் முடிக்க மத்திய அரசு இப்போது புதிதாக ஃபாஸ்ட் டிராக் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. தற்போது டெல்லி ஏர்போர்ட்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில காலங்களில் மேலும் 20 நகரங்களுக்கு இந்த ஃபாஸ்ட் டிராக் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியர்கள் வெளிநாட்டுச் செல்லும் போதும் திரும்பும்போதும், அதேபோல வெளிநாட்டினர் இந்தியா வந்து செல்லும் போது இம்மிகிரேஷன் பிராசஸை முடிக்க வேண்டி உள்ளது.

தற்போது உள்ள செயல்முறையில் இம்மிகிரேஷன் பிராசஸை முடிக்கக் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை ஆகிறது. ஆனால், இதை சில நொடிகளில் முடிக்கும் வகையில் ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
புதிய திட்டம்: கடந்த ஜூன் 22ம் தேதி இந்தத் திட்டம் முதல்முறையாக டெல்லி ஏர்போர்ட்டில் அமல்படுத்தப்பட்டது. இதை Fast Track Immigration Trusted Traveller Programme என்று அழைக்கிறார்கள். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பயணிகளுக்கு பயோமெட்ரிக் மூலம் ஒப்புதல் தரப்படும். இதன் மூலம் டிப்பாச்சர் மற்றும் அரைவலின் போது அவர்கள் சில நொடிகளில் இம்மிகிரேஷன் பிராசஸை முடித்துவிடலாம்.
டெல்லியில் இத்திட்டம் வெற்றிகரமாக இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சின், அகமதாபாத் ஆகிய ஏழு முக்கிய விமான நிலையங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சில மாதங்களில் 21 சர்வதேச விமான நிலையங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.
எப்படி: இந்த FTI- TTP என்பது ஆன்லைன் போர்ட்டல் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இம்மிகிரேஷன் பணியகம் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வகை பயணிகளுக்கு முன்கூட்டியே ஒப்புதல் அளித்து வருகிறது. இதற்கு ஒருவர் விண்ணப்பித்தால் தேவையான சரிபார்ப்புக்குப் பிறகு, நம்பகமான பயணிகள் என அங்கீகரித்து ஒயிட் லிஸ்டில் சேர்க்கப்படுவார்கள். அவர்களது பயோமெட்ரிக் விமான நிலையங்களில் சேகரிக்கப்படும்.
இந்த பதிவு செய்யப்பட்ட பயணிகள் கேட்களை அடையும் போது, போர்டிங் பாஸ் மற்றும் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்தால் போதும்.. பயணிகளின் பயோமெட்ரிக்ஸ் அங்கீகரிக்கப்படுகிறது. அதன் பிறகு கேட் தானாகத் திறக்கப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இது இம்மிகிரேஷன் செயல்முறை முடிந்ததாகக் கருதப்படும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: இந்த ஒயிட் லிஸ்டில் சேர www.ftittp.mha.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தேவையான விவரங்களைப் பயணிகள் வழங்க வேண்டும். அவர்களின் விண்ணப்பம் இம்மிகிரேஷன் பணியகத்தால் சரிபார்க்கப்படும். அந்த விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, சர்வதேச விமான நிலையங்களுக்குச் சென்று பயணிகள் பயோமெட்ரிக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த பயோமெட்ரிக் பதிவு அதற்குக் கட்டாயமாகும்.
இந்த FTI பதிவுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை அல்லது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் வரை வெலிடிட்டி கொண்டு இருக்கும். மேலும், இதற்கு விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்சம் பாஸ்போர்ட் வெலிடிட்டி குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் இருக்க வேண்டும்.
மனித தலையீட்டைக் குறைக்கும்: இந்த இம்மிகிரேஷன் பிராசஸ் மனித தலையீட்டைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் இந்தியர்கள் மட்டும் இதில் கவர் ஆவார்கள். அடுத்த கட்டத்தில் தான் வெளிநாட்டினர் இதில் சேர்க்கப்படுவார்கள். இதில் எதாவது சந்தேகம் இருந்தால் ft-ittp மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications