கடைசி நிமிடத்தில் ரயிலில் பயணிக்க முடியலயா.. ரீஃபண்ட் பெறுவது ரொம்பவே ஈஸி! இதை பண்ணுங்க போதும்!
டெல்லி: எதாவது தவிர்க்கவே முடியாத அவசரம் காரணமாகக் கடைசி நிமிடத்தில், அதாவது சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு உங்கள் ரயில் டிக்கெட்டை கேன்செல் செய்தாலும் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறலாம். அது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது நாம் எந்தவொரு நகரத்திற்கும் எளிதாக ரயில் மூலம் சென்று சேரலாம். பாதுகாப்பு, வேகம், சவுகரியம் எனப் பல காரணங்களால் பொதுமக்கள் பலரும் ரயிலில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்.

இப்போது ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் ரயில் பயணங்களை மேற்கொள்கிறார்கள். ரயிலில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ரயில் பயணம்: இதற்கிடையே சார்ட் ரெடியான பிறகு டிக்கெட்டை ரத்து செய்தால் அதற்கு எப்படி கட்டண தொகையைத் திரும்பப் பெறலாம் என்பது குறித்து நாம் இதில் விரிவாகப் பார்க்கலாம். கடைசி நிமிடத்தில் திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாமல் போனால் எப்படி ரீபண்ட் பெறலாம் என்பதை நாம் இதில் பார்க்கலாம்.
சில தவிர்க்கவே முடியாத சமயங்களில் கடைசி நிமிடத்தில் நாம் ரயில் டிக்கெட்டை கேன்செல் செய்ய வேண்டி இருக்கலாம். பொதுவாக சார்ட் ரெடியான பிறகு கன்பார்ம் ஆன டிக்கெட்டை நாம் கேன்செல் செய்தால் நமக்கு ஒரு ரூபாய் கூட நமக்குத் திரும்பக் கிடைக்காது. ஆனால், உண்மையில், சில குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றினால் சார்ட் ரெடியான பிறகு கேன்செல் செய்யும் டிக்கெட்களுக்கும் நம்மால் தொகையைத் திரும்பப் பெற முடியும்.
என்ன செய்ய வேண்டும்: டிக்கெட் கண்பார்ம் ஆன பிறகும் ரயிலில் பயணிக்க முடியாமல் போனாலோ.. அல்லது பகுதியளவு மட்டுமே பயணம் செய்ய முடிந்தாலோ நம்மால் டிக்கெட் தொகையைத் திரும்பப் பெற முடியும். இதற்கு ரயில்வே விதிகளின்படி டிக்கெட் டெபாசிட் ரசீதை (டிடிஆர்) சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்தால் போதும் டிக்கெட் தொகையை நம்மால் திரும்பப் பெற முடியும்.
இதற்கு, முதலில் நாம் ஐஆர்சிடிசி தளத்தின் அதிகாரப்பூர்வ தளமான www.irctc.co.in தளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ஹோம் பேஜில் இருந்து My Account சென்று அதில் My transactionக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் File TDR ஆப்ஷனை க்ளிக் செய்து டிடிஆரை பைல் செய்யலாம். அதில் டிக்கெட் விவரங்களை நாம் செக் செய்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ஒரே டிக்கெட்டில் முன்பதிவு செய்தால் யார் பயணம் செய்யவில்லையே அவர்கள் பெயரை மட்டும் தேர்வு செய்யவும்.
TDR: அதில் TDR என்ற ஆப்ஷனை தேர்வு செய்து. அதற்கு உரிய காரணத்தை நிரப்பவும்.. PNR எண், ரயில் எண் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை நிரப்புங்கள். அடுத்து க்ளிக் செய்தால் மொபைல் எண்ணுக்கு ஒடிபி ஒன்று வரும். அந்த ஒடிபியை நிரப்பி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து ரீஃபண்ட் தொகை கணக்கிடப்படும். அதன்படி இறுதியாக எவ்வளவு தொகையை ரீஃபண்ட் தொகையாகப் பெறுவீர்கள் என்ற தகவல் அந்தப் பக்கத்தில் இருக்கும்.
அதை ஒகே கொடுத்தால் PNR மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுவது குறித்த விவரங்கள் கொண்ட பக்கம் வரும். அதன் அடிப்படையில் நமக்கான ரீபண்ட் கிடைக்கும்.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
தட்கல் டிக்கெட் ரூல்ஸ்! டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணம் திரும்ப கிடைக்குமா? எவ்வளவு பிடிப்பார்கள்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications