கையில் இருக்கும் 500 ரூபாய் நோட்டு போலியானு டவுட் வருதா.. இதை செக் பண்ணுங்க போதும்! ரொம்பவே ஈஸி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இப்போது 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதில் அசல் நோட்டு எது என்பதில் சிலருக்குக் குழப்பம் இருக்கலாம். அதை எளிதாகக் கண்டறியும் வழிகளைப் பார்க்கலாம்

கடந்த 2016ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். புழக்கத்தில் இருந்த சுமார் 85% நோட்டுகள் அப்போது செல்லாது என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. சில ஆண்டுகளிலேயே 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அடிப்பதையே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. இருப்பினும் 500 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகிறது.

பரவிய தகவல்

பரவிய தகவல்

500 ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்திற்கு வந்த போது, அதில் போலி நோட்டுகள் எதுவும் இல்லை. ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல போலி நோட்டுகள் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே இணையத்தில் போலி நோட்டுகள் என்று கூறி தகவல் பரவின. அதாவது ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திற்கு அருகே இருக்க வேண்டிய பச்சைக் கோடுகள் அதற்குப் பதிலாகக் காந்தி படத்திற்கு அருகில் இருந்தால் அவை போலியானவை என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. இருப்பினும், இது பொய்யான தகவல் என்பதையும் இரண்டு வகையான கரன்சி நோட்டுகளும் ரிசர்வ் வங்கியின் கரேன்சி தான் என்பதையும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியது.

உண்மை என்ன

உண்மை என்ன

அதாவது பச்சை நிற கோடுகள் கவர்னரின் கையெழுத்திற்கு அருகிலும் இருக்கலாம்.. காந்தி படத்தின் அருகிலும் இருக்கலாம். இரண்டுமே உண்மையான நோட்டுகள் தான். அசலான 500 ரூபாய் நோட்டுகளை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் தகவல்படி, மகாத்மா காந்தி, ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருக்க வேண்டும். ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் போது யார் கவர்வனாக உள்ளனரோ அவர்கள் கையெழுத்தே இதில் இருக்கும்.

எளிதாகக் கண்டுபிடிக்கலாம்

எளிதாகக் கண்டுபிடிக்கலாம்

நோட்டின் பின்பக்கம், நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் செங்கோட்டை படமும் இடம் பெற்றிருக்கும். இதன் நிறம் ஸ்டோன் கிரே என்றாலும் கூட, எளிதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒருவித பச்சை நிறம் என்று சொல்லலாம்.. இதையெல்லாம் வைத்து நாம் அசலான ரூபாய் நோட்டுகளைக் கண்டறியலாம். முன்பு எல்லாம் போலி ரூபாய் நோட்டுகள் மிக எளிதாகக் கண்டுபிடிக்கும் வகையில் இருக்கும். ஆனால், இப்போது அதைக் கண்டுபிடிக்கவே சற்று கவனமா ஆராய வேண்டியுள்ளது. இனி போலி ரூபாய் நோட்டுகளை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

நோட்டின் முன்புறம்

நோட்டின் முன்புறம்

ரிசர்வ் வங்கியின் தகவல்படி, உண்மையான ரூ.500 நோட்டுகளின் உள்ள இந்த அம்சங்கள் இல்லையென்றால் அவை போலி நோட்டுகள் என்பதை உறுதி செய்யலாம். எனவே, பின்வரும் அம்சங்கள் செக் செய்து 500 ரூபாய் நோட்டுகளை வாங்குங்கள். இதில் மொத்தம் 15 அம்சங்கள் உள்ளன. அதை நாம் பார்க்கலாம். 1) ரிஜெஸ்டரில் 500 என்ற நம்பர் தெரியும்.. 2) கருப்பு நிற இடத்தில் 500 என்று இருக்கும்..3) தேவகிரியில் எழுத்து முறையில் 500 என இருக்கும்.. 4) மையத்தில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும்.. 5) இந்த இடத்தில் ‘பாரத்' என இந்தியிலும் மற்றும் ‘இந்தியா' என்ற ஆங்கிலத்திலும் இருக்கும்.

என்ன இருக்கும்

என்ன இருக்கும்

6) கருப்பு நிற கோடுகள் பாதி தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அந்த கோட்டிலும் ‘பாரத்' என இந்தியிலும் மற்றும் ‘இந்தியா' என்ற ஆங்கிலத்திலும் வார்த்தைகள் இருக்கும். அதை நாம் சற்று திருப்பினால், அதன் கலர் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும்.. 7) மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் வலதுபுறத்தில் உத்தரவாதம், வாக்குறுதி, ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து மற்றும் ரிசர்வ் வங்கியின் சின்னம் இருக்கும்.. 8) மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் 500 என்ன எண்ணின் வாட்டர்மார்க்ஸ் இருக்கும். வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் இது நன்கு தெரியும்.

இதை செக் பண்ணுங்க

இதை செக் பண்ணுங்க

9) ரூபாய் நோட்டின் சீரியல் நம்பர் இடது பக்கத்தில் இருந்து வலது புறத்திற்கு ஏறுவரிசையில் இருக்கும்.. 10) ரூபாய் சின்னமான ₹ உடன் 500 என்ற எண் இருக்கும்; இவை பச்சை நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு நிறம் மாறும்.. 11) வலதுபுறம் அசோக தூண் சின்னம் இருக்கும்.. 12) பார்வையிழந்தோர் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் அசோக சின்னத்திற்கு மேலே 500 என எழுதப்பட்டிருக்கும். மேலும், ரூபாய் நோட்டின் இரு பக்கமும் பிரெய்லி முறையில் 500 என எழுதப்பட்டிருக்கும்.

நோட்டின் பின்புறம்

நோட்டின் பின்புறம்

13) இடதுபுறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு இருக்கும்.. 14) ஸ்வச் பாரத் லோகோ இருக்கும்.. 15) பல்வேறு இந்திய மொழிகளில் 500 ரூபாய் என எழுதப்பட்டிருக்கும்.. 16) செங்கோட்டை படம் இருக்கும்.. 17) தேவகிரியில் 500 என்று எழுதப்பட்டிருக்கும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 15 அம்சங்களை வைத்து ரூபாய் நோட்டு உண்மையானதா அல்லது போலியா என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+