Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாயும் புலி!" அன்று வெறும் 1400.. இன்று 3167.. "நல்லதுதான்!" ஆனாலும் புதைந்திருக்கும் பெரிய பிரச்னை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருவது நல்ல செய்தி தான். ஆனால், புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பது நமக்கு வேறு சில பிரச்சினைகளையும் தருகிறது. அது என்ன? அதை எப்படிச் சரி செய்ய வேண்டும்? என்பதைப் பார்க்கலாம்.

தென்னக மாநிலங்களுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று கர்நாடகா பந்திப்பூருக்கு சென்றிருந்தார். அவர் புலிகளின் எண்ணிக்கையை இன்று வெளியிட்டார்.

 How to raise Tiger numbers in India without making human animal conflicts

2018 இல் மதிப்பிடப்பட்ட சுமார் 3,000 புலிகளின் எண்ணிக்கை, இப்போது 2022 இல் 3,167 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த நிலையை நாம் ஈஸியாக அடையவில்லை. இதற்குப் பெரிய போராட்டமே நடந்துள்ளது.

புராஜெக்ட் டைகர்: மது நாட்டின் தேசிய விலங்காகப் புலி தான் இருக்கிறது. இந்த புலியைக் காக்க புராஜெக்ட் டைகர் என்ற திட்டத்தை முன்னெடுத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. புலிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதை நாம் கொண்டாடும் போது, இதனால் நாம் எதிர்கொள்ளும் சில சவால்களும் உள்ளன. அடுத்து வரும் ஆண்டுகளில் நாம் இதற்குத் தான் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அப்போது தான் புலிகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து பாதுகாக்க முடியும்.

இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது, அழிந்து வரும் புலிகளைக் காப்பாற்ற 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி புராஜெக்ட் டைகர் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அப்போது ஒன்பது புலிகள் காப்பகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலைில், இப்போது நாட்டில் 53 பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருக்கிறது.

புலிகள்: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் 40,000 புலிகள் இருந்தன. இருப்பினும், வாழ்விட அழிப்பு மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் நடந்த வேட்டை காரணமாகப் புலிகள் எண்ணிக்கை கிடுகிடுவென குறைந்தது. 1972ல் இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது நாட்டில் வெறும் 1,411 புலிகள் மட்டுமே இருந்தன.

 How to raise Tiger numbers in India without making human animal conflicts

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது முதல் 1972 வரையிலான காலகட்டம் இந்தியாவில் வனவிலங்குகளுக்கு மிகவும் மோசமான காலகட்டமாக இருந்தது. சுதந்திரத்திற்கு முன்பு வரை உயரடுக்கில் இருந்தவர்கள் மட்டுமே செய்த வேட்டை என்பது அதன் பிறகு பரவலானது. இதனால் வனவிலங்குகளின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்தது. அதில் நமது தேசிய விலங்கான புலிகள் மட்டும் விதி விலங்கு இல்லை.

இந்தியாவில் தான் அதிகம்: புராஜெக்ட் டைகர் மூலம், உலகிலேயே அதிக புலிகளைக் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருந்து புலிகள் மீட்கப்பட்டுள்ளன. 1972ஆம் ஆண்டு 1,411 புலிகள் மட்டுமே இருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு அது 2,967ஆகவும், 2022இல் அது 3,167ஆகவும் அதிகரித்துள்ளது.

புராஜெக்ட் டைகர் மட்டும் அப்போது கொண்டு வரப்படவில்லை என்றால் இந்தியாவில் நிச்சயம் இப்போது ஒரு புலி கூட இருந்திருக்காது என்பதே வல்லுநரின் கருத்து. நமது நாட்டில் புலி வேட்டையை தடுத்ததில் இந்த புராஜக்ட் டைகர், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ஆகிய இரண்டிற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. புலிகள் வேட்டையாடப்படுவதை 1970கள் மற்றும் 1980களில் கணிசமாகக் குறைக்க இந்த இரண்டும் முக்கிய காரணம்.

 How to raise Tiger numbers in India without making human animal conflicts

காடுகள்: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் 40,000 புலிகள் இருந்தபோது, ​​இந்தியாவின் பெரும் பகுதி காடுகளால் சூழப்பட்டு இருந்தது. ஆனால், அதன் பிறகு இந்தியாவின் மக்கள்தொகை பெருகியதால், புலிகளின் வாழ்விடங்கள் பெருவாரியாக அழிந்தது. அன்று காடுகள் நாடு முழுக்க பரவி இருந்த நிலை மாறி, இப்போது நாட்டில் ஆங்காங்கே காடுகள் சிதறி இருக்கும் நிலைக்கு வந்துள்ளோம்.

இந்த சின்ன சின்ன காடுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் புலிகள் இருக்க முடியும். புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, உணவுக்காக அவை ஊருக்குள் வர தொடங்கும். இதனால் மனித மிருக மோதல் அதிகரிக்கும் ஆபத்தும் இருக்கவே செய்கிறது.

என்ன தீர்வு: இதை ஒப்புக் கொள்ளும் புராஜெக்ட் டைகர் தலைவர் எஸ்பி யாதவ், "சில புலிகள் சரணாலயங்கள் அதன் அதிகபட்ச புலிகள் எண்ணிக்கையை எட்டியுள்ளது. அதேநேரம் மற்ற சரணாலயங்களில் புலிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு அறிவியல் பூர்வமாகப் புலிகளின் எண்ணிக்கையை நிர்வகித்து வரத் திட்டங்கள் இருக்கிறது" என்றார்.

அதேநேரம் நமது நாட்டில் புலி வாழ்விடங்கள் பலவற்றில் புலிகள் இல்லாமலேயே இருக்கிறது. அதாவது சுமார் 300,000 சதுர கி.மீட்டரில் 90,000 மட்டுமே புலிகள் உள்ளன. மற்ற வாழ்விடங்களையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம் இதன் மூலம் புலிகள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இவை பெரும்பாலும் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன.

முதலில் புலிகளின் இரையாக இருக்கும் விலங்குகளின் எண்ணிக்கை அங்கே அதிகரிக்க வேண்டும். அதன் பின், வேட்டையாடுவதைக் குறைக்க வேண்டும். அடுத்து நக்சல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்த வேண்டும். அதன் பின்னரே அங்குப் புலிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்த முடியும்.

மற்ற நாடுகளுக்குத் தர முடியுமா: ஒரு சிலர் மற்றொரு ஐடியாவை முன்வைக்கிறார்கள். அதாவது நாம் எப்படி சிவிங்கி புலிகளை ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வாங்கினோமோ.. அதேபோல புலிகள் அழிந்து போன ஆசிய நாடுகளுக்குப் புலிகளைக் கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள்.

ஆனால், சிவிங்கி புலியும் புலியும் ஒன்று இல்லை. சிவிங்கி புலிக்குக் குறுகிய நிலப்பரப்பு இருந்தால் போதும். ஆனால், புலிக்கு அப்படி இல்லை. ஒவ்வொரு புலிக்கும் மிகப் பெரிய இடப்பரப்பு தேவை. இத்துடன் மேலும் பல காரணங்கள் இருப்பதால் இப்படிக் கொடுப்பது சரியாக இருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மற்றொரு பெரிய பிரச்சினை: மேலும், நாட்டில் இப்போது இருக்கும் 70 சதவீத புலிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தான் உள்ளன. முன்பு நாட்டில் இருந்து பல காப்பகங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பிலேயே இருந்தன. ஆனால், இப்போது அவை துண்டிக்கப்பட்டுத் தனித் தீவுகளைப் போல உள்ளன. நாட்டில் இப்போது இருக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் சராசரி அளவு 230 சதுர கி.மீ. மட்டும் தான். எனவே, குறிப்பிட்ட இடத்தில் உள்ள புலிகளுக்குள் மட்டுமே இனப்பெருக்கம் நடக்கிறது. இது மரபணுவை வீக் செய்கிறது.

இதனால் எதாவது ஒரு தொற்றுநோய் ஏற்பட்டாலும், அங்கே இருக்கும் ஒட்டுமொத்த புலிகளையும் அழிக்கும் அபாயம் இருக்கவே செய்கிறது. பொதுவாக ஒவ்வொரு 300 முதல் 500 புலிகளின் மரபணு கொஞ்சமாவது மாற வேண்டும். அப்போது தான் எந்தவொரு தொற்றில் இருந்தும் அதனால் தப்ப முடியும். இதற்கு காப்பகங்களை இணைப்பது முக்கியமானதாகும்.

ஆனால், காப்பகங்களுக்கு இடையே இருக்கும் நிலங்கள் பாதுகாப்பற்ற அரசு மற்றும் தனியார் நிலங்களாக உள்ளது இதில் சிக்கல் தான். இருப்பினும், இதைத் தாண்டி காப்பகங்களை இணைத்தால் மட்டுமே நீண்ட கால நோக்கில் புலிகளின் எண்ணிக்கையை வளர்க்க முடியும் என்பதால் அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+