டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வெடி குண்டு உள்ளது.." போன் காலில் மிரட்டிய நபர்.. பரபரத்த டெல்லி விமானம்.. என்னாச்சு!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இருந்து புனே செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக டெல்லி போலீசரை போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து குறிப்பிட்ட விமானம் நிறுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. விமானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தால் விமனம் புறப்படுவது தாமதம் ஆனது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

திடீரென முடங்கிய திடீரென முடங்கிய "விமான சேவை.." தவிக்கும் பயணிகள்.. அமெரிக்காவில் பரபரப்பு!

தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.

சர்வதேச அளவில் பயணிகளை அதிகம் கையாளும் விமான நிலையங்களில் ஒன்றாக இருக்கும் இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடு வெளிநாடுகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயங்குகின்றன. இந்த விமான நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

மீண்டும் சர்ச்சையில் ஏர் இந்தியா..ட்விட்டரில் பொங்கிய பயணி..கொந்தளித்த நெட்டிசன்கள்..ஏன் தெரியுமா?மீண்டும் சர்ச்சையில் ஏர் இந்தியா..ட்விட்டரில் பொங்கிய பயணி..கொந்தளித்த நெட்டிசன்கள்..ஏன் தெரியுமா?

விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு

விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு

விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவரது உடமைகளும் தீவிர பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த டெல்லி விமான நிலையத்தில் இன்று மாலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து புனே செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் ஒருவர் அழைப்பை உடனடியாக துண்டித்துவிட்டார். உடனடியாக டெல்லி போலீசாரும் இந்திரா காந்தி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதனால் மாலை 6.30 மணிக்கு புறப்பட இருந்த விமானம் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டது. விமானத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்கு இடமான எந்த ஒரு பொருளும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியாக இருக்கலாம் என தெரிகிறது. வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிய பாதுகாப்பு நடைமுறைகள்

உரிய பாதுகாப்பு நடைமுறைகள்

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு அழைப்பு வந்ததும் விமானத்தை உடனடியாக நிறுத்தி விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விமானம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. விமானத்தில் சந்தேகத்திற்கு இடமான எந்த ஒரு பொருளும் கிடைக்காவிட்டாலும் நாங்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினோம்" என்று தெரிவித்தனர்.

பயணிகள் கடும் அவதி

பயணிகள் கடும் அவதி

வெடி குண்டு மிரட்டல் காரணமாக டெல்லியில் இருந்து புனேவிற்கு செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் உரிய நேரத்தில் புறப்படுவது தாமதம் ஆனது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். முன்னதாக மும்பையில் உள்ள அம்பானி பள்ளிக்கும் இதேபோல ஒரு வெடிகுண்டு மிரட்டல் கடந்த செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்டு இருந்தது. மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள திருபாய் அம்பானி பள்ளிக்கு விக்ரம் சிங் என்பவர் போன் செய்து வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

 வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல்

இதைதொடர்ந்து பள்ளியில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவுமில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேடினர். விசாரணையில் அவர் குஜராத் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குஜராத் சென்ற போலீசார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை இன்று கைது செய்தனர்.

English summary
A mysterious person contacted the Delhi Police on the phone and threatened that there was a bomb on the Spice Jet flight from Delhi to Pune. After that, the particular flight was stopped and intensive search was conducted. No suspicious objects have been found on the plane so far. The flight was delayed due to the incident. Passengers suffered due to this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X