அரசு ஊழியர்களுக்கு "ஜாக்பாட்".. திடீர்னு அறிவித்த மத்திய அரசு.. பழைய ஓய்வூதிய திட்டம்: ஹேப்பி நியூஸ்
டெல்லி: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து மத்திய அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அது என்ன அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் 22-ல் தேசிய ஓய்வூதிய திட்டம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.. அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவை வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

சபாஷ் திட்டம்: முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பிறகு, அனைவருக்குமான அனுமதி அளிக்கப்பட்டது.. 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். தனியார் துறை ஊழியர்களும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும். பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்தால் தேசிய ஓய்வூதிய திட்டம் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பென்சன் பலன்கள் + வரிச் சலுகைகள் உள்ளன.. இதனால், இளம் தலைமுறையினரிடம், இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டிற்கு முன்பு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 2003ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதிக்கு முன்பு அகில இந்திய பணியாளராக பணி நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளும் படியான விருப்பத்தை வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
சூப்பர் அறிவிப்பு: இதுதொடர்பாக, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:
AIS (அகில இந்திய சேவை) (DCRB) விதிகள், 1958ன்படி, டிசம்பர் 22, 2003 அன்று தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்.பி.எஸ்.) அமல்படுத்துவதற்கான அறிவிப்புக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட காலிப் பணியில் சேர்ந்த ஏஐஎஸ் அதிகாரிகள், ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் வருபவர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) விதிகளின் கீழ் காப்பீடு பெற ஒரு முறை விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
சிவில் சர்வீஸ் தேர்வு 2003, சிவில் சர்வீஸ் தேர்வு 2004 மற்றும் இந்திய வனப் பணித் தேர்வு 2003 ஆகிய அறிவிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏஐஎஸ் அதிகாரிகள் இந்த விதிகளின் கீழ் வருவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை பெற பல்வேறு நீதிமன்றங்கள் அனுமதித்த நிலையில், AIS (DCRB) விதிகளின் 1958 இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்தியப் பணியாளர்கள் (All India Service personnel), அந்த பணியில் சேர்வதற்கு முன்னர், CCS (ஓய்வூதியம்) விதிகள், 1972 (இப்போது 2021) அல்லது வேறு ஏதேனும் விதிகளின் கீழ் உள்ளடக்கப்பட்ட மத்திய அரசுப் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவர்களும் மார்ச் 3, 2003 தேதியிட்ட d/o P&PW O.M இன் விதிகளின் கீழ் தகுதியுடையவர்கள் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, AIS (DCRB) விதிகள், 1958 இன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்வதற்கான ஒரு முறை விருப்பத்தைப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.
விளக்கம்: மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல்களின்படி, அதிகாரிகளால் தேர்வு செய்யப்படும் விருப்பத்தேர்வு, அவர் எந்த மாநில கேடரில் உள்ளாரோ அந்த மாநில அரசிடம் சமர்பிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் தேவைப்பட்டால், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையிடமும் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்திடமும் அல்லது இந்திய வன சேவை உறுப்பினர்கள் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையிடமும் கேட்டு தெளிவு பெறலாம்.
காலக்கெடு: இந்த அறிவுறுத்தல்களின்படி, நவம்பர் 30, 2023க்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஒரு முறை விருப்பத்தைப் பயன்படுத்தலாம். இந்த ஒருமுறை விருப்பத்தைப் பயன்படுத்தத் தகுதியுடைய அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மட்டுமே வருவார்கள். இந்த ஒருமுறை பயன்படுத்தப்படும் விருப்பம் இறுதியானது.
தகுதியான ஊழியர்களுக்கு ஜனவரி 31, 2024க்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்படும், அதன்பிறகு அவர்களின் என்பிஎஸ் கணக்குகள் மார்ச் 31, 2024க்குள் மூடப்பட்டு விடும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குஷி: விருப்பமுள்ள அரசு ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணைகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications