Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ஹுசைன் ஒபாமா’.. அசாம் முதல்வர் ஹிமந்த ட்வீட்டால் பரபரப்பு.. வரிந்து கட்டி இறங்கிய எதிர்க்கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஹுசைன் ஒபாமாக்கள் பலர் இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று கூறிய கருத்தைத் தொடர்ந்து இவ்வாறு கூறியுள்ளார் ஹிமந்த பிஸ்வா சர்மா.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார்.

பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் இணைந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Hussain Obama: Assam CM Himanta Biswa Sarma tweet controversy: Opposition parties hit back

அதற்கு சற்று முன்னதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில், தான் மோடியுடன் உரையாடினால், இந்தியாவில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் குறித்தும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் கூறியிருப்பேன் எனக் கூறினார்.

மேலும் பிரதமர் மோடி உடனான தனது சந்தித்திப்பின் முக்கிய அம்சமாக சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இருந்திருக்கும் எனக் கூறிய ஓபாமா, இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒபாமாவின் இந்தக் கருத்துக்கு பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில், "உணர்வுகளை புண்படுத்தியதற்காக ஒபாமாவுக்கு எதிராக கவுகாத்தியில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா? ஒபாமாவை விமானத்தில் இருந்து இறக்கி அவரை கைது செய்ய அசாம் போலீசார் வாஷிங்டனுக்கு செல்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கு எதிராக அசாமில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை விமர்சிக்கும் வகையில் இந்த ட்வீட்டை அவர் பதிவிட்டிருந்தார். கடந்த பிப்ரவரியில் காங்கிரஸ் தலைவர் பவன் கேராவை கைது செய்தது மற்றும் கடந்த ஆண்டு அப்போதைய குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை கைது செய்தது உட்பட அசாம் காவல்துறை பல்வேறு இடங்களுக்குச் சென்று கைது செய்தது குறொப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்த ட்வீட்டை குறிப்பிட்டு பதில் அளித்துள்ள பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "இந்தியாவிலேயே உசேன் ஒபாமாக்கள் நிறைய பேர் உள்ளனர். வாஷிங்டனுக்கு செல்வதற்கு முன்பு நாம் இவர்களை கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அசாம் காவல்துறை எங்களின் சொந்த முன்னுரிமைகளின்படி செயல்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடியாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில், "'என் நண்பர் பராக்' இப்போது ஹுசைன் ஒபாமா ஆகிவிட்டார். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஹிமந்தா பதிலளித்துள்ளார். ஜனாதிபதி ஒபாமா ஒரு முஸ்லீம் என்றும் இந்திய முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் ஹிமந்த சர்மாவின் ட்வீட் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்வியின் முன்மாதிரியாக இருக்கிறது. இது குறித்து பிரதமர், வெளியுறவுத்துறை மற்றும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hussain Obama: Assam CM Himanta Biswa Sarma tweet controversy: Opposition parties hit back

சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதியும் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் இந்த ட்வீட் பற்றி விமர்சித்துள்ளார். "பராக் இப்போது ஹுசைன் ஆகிவிட்டார். பராக் ஒபாமா தெரிவித்த கருத்துகள் தவறு இல்லை என்பதை நிரூபித்துள்ளார் பாஜகவின் முதல்வர்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகாய் தனது ட்வீட்டில், "இந்தியாவில் பாகுபாடு இல்லை என்று பிரதமர் மோடி கூறிய 24 மணி நேரத்திற்குள், அவரது கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் ஒபாமாவை 'உசேன் ஒபாமா' என்று குறிப்பிடுகிறார் . இந்தியாவில் முஸ்லீம்களை கவனித்துக் கொள்ள தனது மாநில காவல்துறையைப் பயன்படுத்துவதாக ஒரு மறைமுக அச்சுறுத்தலை வெளியிடுகிறார். இது சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் போலித்தனத்தைதெளிவாக அம்பலப்படுத்துகிறது." எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+