கைநழுவிய முதல்வர் பதவி.. ‛காந்தி குடும்ப முடிவை தலை வணங்கி ஏற்கிறேன்’.. டிகே சிவக்குமார் உருக்கம்
டெல்லி: கர்நாடகா முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் பதவி கைநழுவியது பற்றி டிகே சிவக்குமார் உருக்கமான சில விஷயங்களை கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கிடையே தான் முதல்வர் பதவியை பெற மாஜி முதல்வர் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் இறுதியாக சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா பதவியேற்க உள்ளார். அதேவேளையில் டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அமைச்சரவையில் எனக்கு முதல்வர் பதவி மட்டுமே வழங்க வேண்டும். இல்லாவிட்டால் எந்த பொறுப்பும் வேண்டாம். எம்எல்ஏவாகவும், காங்கிரஸ் தலைவராகவும் செயல்படுவேன் என டிகே சிவக்குமார் கறாராக மேலிட தலைவர்களிடம் கூறினார். இருப்பினும் அவரை சமாதானப்படுத்தி துணை முதல்வர் பதவியை மேலிட தலைவர்கள் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவி கைநழுவிய நிலையில் டெல்லியில் டிகே சிவக்குமார் பேட்டி, ‛‛கர்நாடகா மக்களுக்கு நிலையான ஆட்சியை கொடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வேறு நெருங்கிவிட்டது. இதனால் தற்போதைய சூழலில் வேறு எதுவும் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காந்தி குடும்பத்தினரின் உத்தரவுக்கு நான் தலைவணங்க வேண்டும். கட்சியில் பெரும்பான்மையினரின் முடிவுப்படி செயல்பட வேண்டியது அவசியமானதாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வியூகத்தை இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. பல சமயங்களில் நமது விருப்பத்தை விட மேலிட தலைவர்கள் சொல்வதை தான் நாம் கேட்க வேண்டும். இதன் பின்னணியில் நமக்கு மிகப்பெரிய பொறுப்பும் உள்ளது. இதனால் கர்நாடக மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி அரசு செயல்படும்'' என்றார்.
இதன்மூலம் நீண்ட இழுபறிக்கு பிறகு டிகே சிவக்குமார் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு துணை முதல்வராக தொடர உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. நாளை மறுநாள் பெங்களூரில் நடக்கும் விழாவில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications