Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல்காந்தியும் திருக்குறள் படிக்க ஆரம்பித்து விட்டார்... இனி தேர்தல் பிரச்சார மேடைகளில் கேட்கலாம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தியும் திருக்குறள் படிக்க ஆரம்பித்து விட்டார். அதன் ஆழத்தால் திகைத்துப்போகிறேன் என்று பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, "திருக்குறள் படித்து வருகிறேன். அதன் ஆழத்தால் திகைத்துப்போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். மேலும், ''திருக்குறளை கேட்க கேட்க அது காது வழியாக நுழையும்போது புரிந்துகொள்ள முடிகிறது''என்று தெரிவித்துள்ளார்.

தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன.

ஒரு மனிதனின் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் மூன்று பால்களாக பிரித்து அதை 1330 குறள்களாக இயற்றியுள்ளார் வள்ளுவ பெருந்தகை. திருக்குறளில் மொத்தம் மூன்று பால்கள் உள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பால். இப்படி மூன்று பால்களையும் ஒன்றிணைத்து அழகுற இயற்றப்பட்டதால் திருக்குறளிற்கு முப்பால் என்றொரு பெயர் உண்டு.

முப்பால்

முப்பால்

இந்த முப்பாலும் மேலும் 'இயல்' என்று பகுக்கப்பட்டு ஒவ்வொரு இயலிற்கு கீழ் சில அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கு கீழும் 10 குறள்கள் என்று தொகுக்கப்பட்டு, மொத்தம் 1330 குறள்களோடு இந்த நூல் உலகபுகழ்பெற்று விளங்குகிறது. இதில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளை கொண்டுள்ளது. முதல் அடியில் நான்கும் சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீரும் என மொத்தம் ஏழு சீர்கள் உள்ளது.

அறத்துப்பால்

அறத்துப்பால்

அறத்துப்பால் அறத்துப்பாலில் மொத்தம் 4 இயல்கள் உள்ளன. இதில் முதலாவது இயல் "பாயிரவியல்". பாயிரவியலில் மொத்தம் 4 அதிகாரங்கள் உள்ளன. இதனை தொடர்ந்து இரண்டாவது இயலாக "இல்லறவியல்" உள்ளது. இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து "துறவறவியல்" உள்ளது. அதில் மொத்தம் 13 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது "ஊழியல்". இதில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உள்ளது.

380 பாடல்கள்

380 பாடல்கள்

திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் ஊழியல் மட்டுமே. பாயிரவியல் பகுதியில் 4 அதிகாரங்கள் இல்லறவியல் பகுதியில் 20 அதிகாரங்கள் துறவறவியல் பகுதியில் 13 அதிகாரங்கள் ஊழியல் பகுதியில் 1 அதிகாரம் என அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்களும் 380 பாடல்களும் உள்ளன.

பொருட்பால்

பொருட்பால்

பொருட்பால் பொருட்பாலில் மொத்தம் மூன்று இயல்கள் உள்ளன. இதில் முதலில் வருவது அரசு இயல். இதில் 25 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது அமைச்சு இயல். இதில் 32 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது ஒழிபு இயல். இதில்13 அதிகாரங்கள் உள்ளன. ஆக பொருட்பாலில் மொத்தம் மூன்று இயல்களும் 70 அதிகாரங்களும், 700 பாடல்களும் உள்ளன.

இன்பத்துப்பால்

இன்பத்துப்பால்

முப்பாலில் இறுதியாக வரும் இன்பத்துப்பாலில் மொத்தம் இரண்டு இயல்கள் உள்ளன. ஒன்று களவியல் மற்றொன்று கற்பியல். இதில் களவியலில் 7 அதிகாரங்கள் உள்ளன. கற்பியலில் 18 அதிகாரங்கள் உள்ளன. ஆக காமத்துப்பாலில் மொத்தம் 25 அதிகாரங்களும் 250 பாடல்களும் உள்ளன. மொத்தம் 9 இயல்கள், 133 அதிகாரங்கள், 1330 பாடல்கள் திருக்குறளில் உள்ளன.

உலகப்பொதுமறை

உலகப்பொதுமறை

திருவள்ளுவர் எழுதியுள்ள 1330 குறள்களில் எந்த ஒரு குறளிலும் எந்த ஒரு மதத்தை பற்றியும் குறிப்பிடவில்லை. அதற்கு அடுத்த படியாக அவர் எந்த ஒரு இறைவனை பற்றியும் எந்த ஒரு குரலிலும் கூறவில்லை. அதனால் தான் இன்று அந்த நூல் உலக மக்கள் அனைவருக்கும் சமமானதாக உலக பொதுமறையாகக் போற்றப்படுகிறது. இந்த நூல் ஒரு சாதாரண மனிதன் முதல் நாடாளும் மன்னன் வரை யார் எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது.

மோடியும் திருக்குறளும்

மோடியும் திருக்குறளும்

திருக்குறளின் மீது தேசிய தலைவர்களுக்கு அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ''வணக்கம்'' என்று தமிழில் கூறி பேசத் தொடங்கினார்.'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். முன்னதாக,புதுச்சேரி மாநிலத்தில் நடந்த விழாவில் பேசியபோது, 'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

 மோடியின் திருக்குறள் ஆர்வம்

மோடியின் திருக்குறள் ஆர்வம்

தமிழகம், புதுவைக்கு வந்தால் மட்டுமல்ல லடாக் எல்லையில் ராணுவத்தினர் மத்தியில் மோடி பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

எனநான்கே ஏமம் படைக்கு

எனநான்கே ஏமம் படைக்கு

என்ற குறளை சொன்ன போது அதற்கான விளக்கம் என்னவாக இருக்கும் என்று பலரும் கூகுளில் தேடினர். இதனையடுத்து பல மேடைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார் பிரதமர் மோடி.

ராகுல்காந்தியின் திருக்குறள் ஆர்வம்

ராகுல்காந்தியின் திருக்குறள் ஆர்வம்

திருக்குறளின் மீது ராகுல்காந்திக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அவரும் திருக்குறளை படிக்க ஆரம்பித்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருக்குறள் படித்து வருகிறேன். அதன் ஆழத்தால் திகைத்துப்போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். மேலும், ''திருக்குறளை கேட்க கேட்க அது காது வழியாக நுழையும்போது புரிந்துகொள்ள முடிகிறது''என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேடைகளில் குறள் ஒலிக்கும்

சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடிக்கு போட்டியாக இனி ராகுல்காந்தியும் சரளமாக திருக்குறளை சொல்லி கைத்தட்டல் வாங்குவார் என்று எதிர்பார்க்கலாம். தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேர்தல் காலங்களில் மட்டும் பயன்படுத்தாமல் அனைத்து நேரங்களிலும் திருக்குறளை சொல்லி அவரை பெருமைப்படுத்தலாம் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+