என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை.. எடப்பாடியிடம் உள்ள காவிக்கொடியும் இல்லை.. முக ஸ்டாலின் பதிலடி!
டெல்லி: தன்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை, எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள காவிக்கொடியும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல் எப்போது டெல்லி வந்தாலும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்காமல் சென்றதில்லை என்று கூறிய அவர், அமலாக்கத்துறை குறித்த உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து நியாயமானது என்றும் வரவேற்றுள்ளார்.
யார் அந்த தம்பி?
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனைக்கு பின், கடந்த வாரம் டாஸ்மாக் ஊழியர்கள் வீடுகள், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணை சூடுபிடித்த நிலையில், அதிமுக தரப்பில் யார் அந்த தம்பி என்று கேள்வி எழுப்பப்பட்டது.

வெள்ளைக் கொடி
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள அறிவிப்பு வெளியாகியது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வெள்ளைக்கொடிக்கு வேலை வந்துவிட்டதோ என்று கிண்டல் செய்தார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியது யார் என்று பதிலடி கொடுத்தார்.
டெல்லியில் முக ஸ்டாலின்
இந்த நிலையில் டெல்லி இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் 4 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக கல்வி நிதி மற்றும் நிதிப் பகிர்வு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியது அனைவரின் கவனத்தையும் பெற்றது.
கோரிக்கைகள்
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ திட்டம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தினேன். அதேபோல் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.
எடப்பாடிக்கு பதிலடி
அதேபோல் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கான நிதி, இலங்கை அரசு சிறை பிடித்துள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தினேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை.. அவரிடம் உள்ள காவிக்கொடியும் என்னிடம் இல்லை என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு
தொடர்ந்து அமலாக்கத்துறை குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து தொடர்பான கேள்விக்கு, நியாயமான கருத்து என்று பதில் அளித்தார். காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உடனான சந்திப்பு மரியாதைக்குரியது. எப்போது டெல்லி வந்தாலும், அவர்களை சந்திக்காமல் சென்றதில்லை. அதே சமயம் அரசியலும் பேசப்பட்டது. இல்லையென்று சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications