நபிகள் நாயகத்தை அசிங்க படுத்திட்டீங்க.. திரும்பி வேலைக்கு வராதீங்க! ஷேக் பரபரப்பு ட்விட்.. பரிதாபம்!
டெல்லி: இந்தியாவில் பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் காரணமாக இந்தியர் ஒருவரை கத்தார் ஷேக் பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்த நுபுர் சர்மா.. சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் இஸ்லாமிய இறை தூதர் நபிகளை விமர்சனம் செய்து பேசினார். நபிகளை சில கடுமையான வார்த்தைகளில் நுபுர் சர்மா இகழ்ந்து பேசினார்.
இதையடுத்து கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தது. இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் வைத்தன.
Recommended Video

சம்மன்
இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மனும் அனுப்பப்பட்டது. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. இதையடுத்து இந்தியா சார்பாக கத்தார் அரசிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இவர்களின் கருத்துக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் தொடர்பு இல்லை. இவை கலகத்தை ஏற்படுத்தும் (fringe element) நபர்களின் கருத்துக்கள்தான் என்று இந்திய அரசு விளக்கம் அளித்தது

நுபுர் சர்மா
நுபுர் சர்மாவின் இந்த கருத்து மற்றும் அதற்கான எதிர்வினைகள் காரணமாக அங்கு இருக்கும் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அரபு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. முக்கியமாக அரபு நாடுகளில் தென்னிந்தியர்கள் பலர் வேலை பார்க்கிறார்கள். சிறிய லெவல் வேலைகள் தொடங்கி உயர் பதவிகளிலும் கூட தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள்.

கேரளா
கேரளாவை சேர்ந்த 35 லட்சம் பேர் அரபு நாடுகளில்தான் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக கத்தார், சவூதி, ஈரான், குவைத் ஆகிய நாடுகளில் பலர் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தென் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் அரபு நாடுகளில் உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் காரணமாக அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உங்கள் நாட்டில் இஸ்லாமியர்களை அவமதிக்கிறார்கள்.. எங்கள் நாட்டில் உங்களுக்கு வேலை கிடையாது என்று இந்தியர்களை வெளியேற்றும் போக்கு அதிகரித்து வருகிறது.

அரபு நாடுகள்
அரபு நாடுகளில் இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி இந்துக்களும் வேலை செய்கிறார்கள். இந்த நிலையில்தான் நுபுர் சர்மா போன்றவர்களின் பேச்சால் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல காலமாக அரபு நாடுகளில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் இவர்கள், நுபுர் சர்மா போன்றவர்களின் ஆணவ பேச்சால் மீண்டும் வேலையை இழந்து நாட்டிற்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை இழப்பு
இந்த நிலையில்தான் கத்தாரை சேர்ந்த ஷேக் ஒருவர் இந்தியரை வேலையை விட்டு அனுப்பிவிட்டதாக கூறி உள்ளார். அதில், இந்தியாவை சேர்ந்த கார்பெண்டர் ஒருவர் என்னுடைய ஸ்பான்சர்ஷிப்பில் கத்தாரில் வேலை செய்து வந்தார். அவர் பிரதமர் மோடியின் மதத்தை சேர்ந்தவர். இந்தியாவில் தற்போது விடுப்பில் இருக்கிறார். நபி அவமானப்படுத்தப்பட்டதால், அவரை மீண்டும் வேலைக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவரை கடவுள் காப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு கடவுள் அமைதியை தரட்டும், என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் ட்விட் சக இந்திய பணியாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications