இஸ்லாமியர்களுக்கு என்ன செய்தீர்கள்? பத்திரிக்கையாளர் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்!
நான் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை, இஸ்லாமியர்களை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் அடைகிறார்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

டெல்லி: நான் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை, இஸ்லாமியர்களை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் அடைகிறார்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காரணமாக இந்திய அரசியல் மிக பரபரப்பாக இருக்கிறது. இதுவரை செய்தியாளர்களை சந்திக்காத பிரதமர் மோடி கூட தற்போது செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தனியாக பேட்டி அளித்து இருக்கிறார்.
பிரதமர் மோடி ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து உள்ளார். தேர்தல் தொடர்பான பல முக்கிய கேள்விகளுக்கு மோடி பரபரப்பு பதில்களை அளித்துள்ளார்.

மோடி பேட்டி
ராகுல் காந்தி குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, நான் ஏன் ராகுல் காந்தியை நேரடியாக தாக்கி பேசவில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. நான் பெரிய ஆட்களின் பெயர்களை கூற முடியாது. நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் மக்களால்தான் இந்த நாட்டின் பிரதமர் ஆனேன். பெரிய நபர்களை பற்றி பேச மாட்டேன்.

இஸ்லாமியர்கள் எப்படி
இஸ்லாமியர்கள் குறித்த கேள்விக்கு, நான் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. இந்துக்களுக்கு எதிராகவும் எதுவும் செய்யவில்லை. இரண்டு மதத்திற்கும் நான் எதுவும் தனியாக செய்யவில்லை. நான் மக்களுக்காக பொதுவாக உழைத்தேன். ஆனால் 2022ல் இந்தியாவில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் வீடுகள் இருக்கும். இந்துவோ, இஸ்லாமியரோ எல்லோருக்கும் வீடுகள் இருக்கும். இஸ்லாமியர்களை அச்சத்தை வைத்து சிலர் வாக்குகளை வாங்க பார்க்கிறார்கள்.

ராமர் கோவில்
ராமர் கோவில் குறித்த கேள்விக்கு, ராமர் கோவில் கட்ட நாங்கள் மட்டும் ஆசைப்படவில்லை. இந்தியாவில் எல்லோரும் ராமர் கோவில் வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். உச்ச நீதிமன்றம் இதில் தீர்வு அளிக்க வேண்டும். தீர்வு அளித்தவுடன் கண்டிப்பாக பணிகளை தொடங்குவோம்.

மாற்றம் கொண்டு வந்தோம்
நாங்கள் கடைசி 60 மாதத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறோம். இளைஞர்கள் இடையே வேலைவாய்ப்பு பெருகி இருக்கிறது. அதைவிட, சுயதொழில் அதிகமாக உயர்ந்து உள்ளது. 60 வருடங்களில் இல்லாத பெரிய வளர்ச்சி ஆகும் இது. இளைஞர்கள் பணியாற்றும் முறையையே நாங்கள் மாற்றி இருக்கிறோம், என்று மோடி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications