மத்திய அரசை கண்டித்து டெல்லியில் நாளை மாஸ் காட்டும் "இந்தியா" கூட்டணியின் 16கட்சி மாணவர் அமைப்புகள்!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள 16 கட்சிகளின் மாணவர் இயக்கங்கள் ஒன்றிணைந்து டெல்லியில் நாளை கண்டனப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளன. தமிழ்நாட்டின் திமுக மாணவர் அமைப்பு, திராவிடர் மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்டவையும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.
லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்காக பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்துள்ளன.

லோக்சபா தேர்தலில் "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்காக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. "இந்தியா" கூட்டணி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் காரசாரமான கருத்து வேறுபாடுகள் வெடித்தன. ஆனால் தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் "இந்தியா" கூட்டணியில் சுமூகமான தொகுதி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் "இந்தியா" கூட்டணியின் புதிய முயற்சியாக இதில் இடம் பெற்ற கட்சிகளின் மாணவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய ஐக்கிய மாணவர் சங்கம் என்ற பெயரில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
"இந்தியா" கூட்டணியின் "இந்திய ஐக்கிய மாணவர் கூட்டமைப்பில்" இடதுசாரி கட்சிகளின் மாணவர் அமைப்புகள், திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மாணவர் அமைப்புகள், தென்னிந்திய மாநிலங்களின் மாணவர்கள் உருவாக்கிய திராவிடர் மாணவர் கூட்டமைப்பு, சமாஜ்வாதி கட்சி, ஆர்எல் டி கட்சிகளின் மாணவர் அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஐக்கிய மாணவர் கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் நாளை பிரம்மாண்ட போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை உள்ளிடவைகளுக்கு எதிரான முழக்கங்களுடன் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. பாஜக உள்ளிட்ட இந்துத்துவா இயக்கங்களின் மாணவர் அமைப்புகளுக்கு சவால்விடும் வகையில் இந்திய ஐக்கிய மாணவர் கூட்டமைப்பின் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications