அரசியலுக்கு குட்பை சொன்ன பிறகு.. அமித்ஷாவின் அடுத்த இன்னிங்ஸ் இதுதான்! என்ன வேலை? அவரே சொன்ன தகவல்
டெல்லி: பாஜகவின் மிகவும் முக்கிய தலைவராக அமித்ஷா உள்ளார். பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணமான தலைவர்களில் மிகவும் முக்கிய பங்கு வகித்து தற்போது மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக அமித்ஷா செயல்பட்டு வரும் நிலையில் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் செய்யப்போகும் வேலை பற்றிய சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருப்பவர் அமித்ஷா. உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை நிர்வகித்து வருகிறார். பாஜகவின் தேசிய தலைவராக செயல்பட்டு அந்த கட்சியை பல மாநிலங்களில் வெற்றி பெற வைத்தார்.

இப்போது பாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா இருந்தாலும் கூட மாநிலங்கள் வாரியாக கட்சி பணிகளை மேற்பார்வை செய்து வருவதை அமித்ஷா தான் கவனித்து வருகிறார். தமிழகத்தில் கூட அதிமுக - பாஜக கூட்டணியை அமித்ஷா தான் உறுதி செய்தார்.
இந்நிலையில் தான் அமித்ஷா இன்று மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த கூட்டுறவு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட பெண்களுடன் கலந்துரையாடினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பொதுவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மேற்கொள்ள இருக்கும் பணி குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
‛சஹ்கர் சம்வாத்' என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா கூறியதாவது: பொதுவாழ்க்கையில் இருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு எனது வாழ்க்கையை வேதங்கள், உபநிடங்கள் மற்றும் இயற்கை விவசாயத்துக்காக அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளனே். தற்போது ரசாயன உரங்கள் பயன்படுத்தி கோதுமைகள் விளைவிக்கப்படுகிறது. இது உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இயற்கை விவசாயம் மட்டும் தான் உடல்நல பிரச்சனைகளை விரட்டியடிக்கும். அதேபோல் விவசாய பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்தும்.
நான் மத்திய உள்துறை அமைச்சராக ஆனபோது அனைவரும் மிகவும் முக்கிய துறையை பெற்றதாக தெரிவித்தனர். ஆனால் அதேநாளில் தான் நான் கூட்டுறவுத்துறையையும் பெற்றேன். உள்துறையை விட கூட்டுறவுத்துறையை தான் பெரிது என நான் கருதுகிறேன். ஏனென்றால் இந்த துறை என்பது ஏழைகள், கிராம மக்கள், அனைத்து உயிரினங்களுக்காக செயல்பட்டு வருகிறது'' என்று கூறினார்.
முன்னதாக அமித்ஷா நம் நாட்டின் கூட்டுறவு இயக்கத்துக்கு அடித்தளம் போட்ட திரிபுவன் காக்காவின் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அப்போது அமித்ஷா பேசுகையில், ‛‛ நாடு முழுவதும், நான் எங்கு சென்றாலும், சிறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து, அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளனர் என்பதை நான் பார்க்கிறேன். இன்று, கூட்டுறவு அமைப்புகள் நிறுவப்பட்ட இடங்களில் மக்கள் ரூ.1 கோடி வரை சம்பாதிக்கிறார்கள். இவை அனைத்தும் திரிபுவன் காக்காவின் தொலைநோக்கு சிந்தனைகளால் சாத்தியமாக்கி உள்ளார். ஆனாலும் அவர் தனக்கென ஒன்றையும் ஏற்படுத்தி கொள்ளவில்லை.
நாடாளுமன்றத்தில் திரிபுவன் காக்காவின் பெயரை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது, ஆனால் நான் உறுதியாக என் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன். பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும். குஜராத் முழுவதும் பெண்கள் திரிபுவன் காக்காவின் பெயரை போற்றுகிறார்கள். அவரது பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவது பெருமைமிகு சாதனை'' என்று குறிப்பிட்டார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications