நேற்று இரவு 8.45 மணிக்கு கூட என்னிடம் போனில் பேசினார்.. சுஷ்மா சுவராஜ் பற்றி உருகிய நண்பர்!
நேற்று இரவு 8.45 மணிக்கு கூட சுஷ்மா சுவராஜ் என்னிடம் நன்றாக போனில் பேசினார், அவரின் மரணத்தை நம்பவே முடியவில்லை என்று சுஷ்மா சுவராஜின் நெருங்கிய நண்பர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: நேற்று இரவு 8.45 மணிக்கு கூட சுஷ்மா சுவராஜ் என்னிடம் நன்றாக போனில் பேசினார், அவரின் மரணத்தை நம்பவே முடியவில்லை என்று சுஷ்மா சுவராஜின் நெருங்கிய நண்பர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார், இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவருக்காக சர்வதேச அரங்கில் அதிகம் குரல் கொடுத்தவர் என்றால், அது முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த சுஷ்மா சுவராஜ்தான்.

ஆஜர்
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச அரங்கத்தில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வ், சுஷ்மா சுவராஜின் நெருங்கிய நண்பர். இந்த நிலையில் சுஷ்மா சுவராஜின் மரணத்துக்கு தற்போது ஹரிஷ் சால்வ் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

கடைசி வரை
அதில், நான் நேற்று இரவு 8.45க்குதான் போனில் பேசினேன். என்னிடம் மிகவும் நன்றாக எப்போதும் போல பேசினார். அவரின் குரலில் எந்த மாறுபாடும் இல்லை. அவர் என்னிடம் ஒரு ரூபாய் கடன் வைத்து இருப்பதாக கூறினார்.

எப்படி இருந்தார்
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வெற்றிபெற்றால் ஒரு ரூபாய் சம்பளம் கொடுப்பதாக நாங்கள் ஒப்பந்தம் போட்டோம். அதை அடுத்த முறை சந்திக்கும் போது அவர் கொடுப்பதாக கூறினார். ஆனால் தற்போது அது நடக்காமல் போய்விட்டது.

உதவி
வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களுக்கு உதவி செய்வதற்காக அவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லக்கூடிய நிலையில் இருந்தார். இந்த இழப்பு எனக்கு தனிப்பட்ட வகையில் மிகப்பெரிய இழப்பு. தனிப்பட்ட வகையில் மட்டுமல்ல, நாட்டுக்கே அவரின் இழப்பு மிகப்பெரிய இழப்பு.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications