மோடியை இரக்கமற்றவர் என நினைத்தேன்.. மனிதாபிமானத்தை காட்டிவிட்டார்- குலாம் நபி ஆசாத் நெகிழ்ச்சி!
டெல்லி: பிரதமர் மோடியை நான் இரக்கமற்ற மனிதராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் சிறந்த மனிதாபிமான எண்ணத்தை வெளிப்படுத்தினார் என்று குலாம் நபி ஆசாத் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது கடந்த சில மாதங்களாகவே அதிருப்தியில் இருந்து வந்த குலாம் நபி ஆசாத், கட்சியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜி 23 தலைவர்கள் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.

பாஜகவின் பி டீம் என குற்றச்சாட்டு
அப்போதில் இருந்தே குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகலாம் என்று அவ்வப்போது பரவலாக பேசப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார். குலாம் நபி ஆசாத் கட்சியின் தலைமை மீது விமர்சனத்தை வைத்ததை விமர்சித்த காங்கிரஸ் கட்சியினர், குலாம் நபி ஆசாத் பாஜகவின் பி டீம் என்றும் வசைபாடினர்.

90 தொகுதிகளிலும் போட்டி
ஆனால், இதையெல்லாம் நிராகரித்த குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், அங்கு உள்ள 90 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக குலாம் நபி ஆசாத் கட்சி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது முழு வீச்சில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கண்கலங்கிய பிரதமர் மோடி
குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு கடந்த ஆண்டு முடிந்த போது, பிரதமர் மோடி குலாம் நபி ஆசாத்தை பாராட்டி மிகவும் உருக்கமாக பேசினார். அப்போது பிரதமர் மோடி கண்கலங்கினார். பிரதமர் மோடி இப்படி உருக்கமாக பேசியதையும், குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியதையும் ஒப்பிட்டு கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பிரதமர் ஏன் கண்கலங்கினார்
இந்த நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் மோடி தன்னைப்பற்றி பேசும் போது கண்கலங்கியது ஏன் என்பதற்கு குலாம் நபி ஆசாத் இன்று விளக்கம் அளித்தார். இது குறித்து குலாம் நபி ஆசாத் பேசுகையில், ''பிரதமர் மோடி பேச்சின் உள்ளடக்கத்தை கவனியுங்கள்..., நான் அவையில் இருந்து விடைபெறுவது குறித்து அப்போது பிரதமர் பேசவில்லை. ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவம் பற்றி பேசினார். குஜராத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கடந்த 2006-ம் ஆண்டு காஷ்மீருக்கு சுற்றுலா வந்திருந்தனர்.

நான் அழுது கொண்டிருந்தேன்
அப்போது தீவிரவாதிகளின் கையெறி குண்டு வீச்சில் குஜராத் சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். அப்போது நான் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்தேன். மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டதும் எனது அலுவலகத்திற்கு போன் செய்தார். தீவிரவாதிகள் நிகழ்த்திய இந்த கொடூர கொலையை என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. நான் அழுது கொண்டிருந்தேன். இதனால், அவருடன் என்னால் பேச முடியவில்லை.

மனிதாபிமான எண்ணத்தை வெளிப்படுத்தினார்
எனது அலுவலக ஊழியர்கள் போனை எனது அருகே கொண்டு வந்ததால் நான் அழுவதை மோடி கேட்டு இருக்கிறார். மோடி இரக்கமற்ற நபராகவே இருந்து இருக்க வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால் மனைவி உடன் இல்லை, குழந்தைகளும் மோடிக்கு இல்லை. ஆனால், எனது எண்ணத்திற்கு மாறாக மோடி தனது சிறந்த மனிதாபிமான எண்ணத்தை வெளிப்படுத்தினார்'' என்றார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications