நான் தேர்தலில் தோற்கவில்லை.. ராஜினாமா செய்ய மாட்டேன்.. மேற்கு வங்கத்தில் புயலை கிளப்பும் மம்தா
கொல்கத்தா: நான் தோல்வி அடையவில்லை. எனவே நான் எனது ராஜினாமா கடிதத்தை சமர்பிக்க மாட்டேன். தேர்தல் ஆணைய உதவியோடு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. என் வாழ்நாளில் இப்படியொரு தேர்தலை பார்த்ததே இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் பாஜக 207 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 80 இடங்களிலும், இடதுசரிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி இந்த தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதவி விலக மாட்டேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் செய்தியாளர்க்ளுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:- "நான் தோல்வி அடையவில்லை. எனவே நான் ராஜ்பவனுக்கு செல்லப்போவது இல்லை. நான் எனது ராஜினாமா கடிதத்தை சமர்பிக்க மாட்டேன். தேர்தல் ஆணைய உதவியோடு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் நான் தாக்கப்பட்டேன். நீதிமன்றம் கூட எங்களுக்கு நீதி வழங்க தவறிவிட்டது. என் வாழ்நாளில் இவ்வளவு மோசமான தேர்தலை பார்த்ததே இல்லை" என்றார். மேற்கு வங்க தேர்தலில் 100 தொகுதிகள் திருடப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் உடைந்தையாக செயல்பட்டதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications