அடுத்த ஆகஸ்ட் 15-ல் இதே டெல்லி செங்கோட்டையில்தான்... 'தலப்பா கட்டி' கெத்துடன் முழங்கிய பிரதமர் மோடி
டெல்லி: 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதியன்றும் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாடு என்ன சாதித்தது? என்கிற பட்டியலை பிரகடனப்படுத்துவோம் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் இன்று 10-வது முறையாக சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றினார்.

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி அடுத்த லோக்சபா தேர்தலில் வென்று மீண்டும் ஆகஸ்ட் 15-ல் தேசிய கொடி ஏற்றுவேன் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன். வாரிசு அரசியல் என்பது இந்த தேசத்தையே நாசமாக்கிவிட்டது. நாட்டின் பண்பாட்டுக்கு எதிரானது ஒருதரப்பை சமாதானப்படுத்தும் போக்கு. ஆகையால் ஊழல், வாரிசு அரசியல், குறிப்பிட்ட தரப்பை மட்டும் சமாதனப்படுத்துதல் ஆகிய 3 தீமைகளுக்கு எதிராக முழுமையான நாம் போராட வேண்டும்.
ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறோம். மக்கள் நலத் திட்டங்க்களில் 10 கோடி போலி பயனாளிகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதே போல் ஊழல்வாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் யாரும் எதிர்பாராத வளர்ச்சியை நாடு அடையும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் நடவடிக்கைகள் அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதியன்று இதே செங்கோட்டையில் இர்ருந்து நாடு சாதித்த வளர்ச்சிகளை உங்கள் முன் சமர்ப்பிப்போம். 2047-ல் முழுமையான வளர்ச்சி என்பது ஒருவரின் கனவு அல்ல. 140 கோடி இந்தியர்களின் கனவு,.
2014-ல் ஆட்சிக்கு வந்த போது இந்தியா உலகப் பொருளாதாரத்தில் 10-வது இட்டத்தில் இருந்தது. தற்போது 140 கோடி இந்தியர்களின் முயற்சியால் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
வடகிழக்கில், குறிப்பாக கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக மணிப்பூரில் அமைதி த்இரும்பி வருகிறது. ஒட்டுமொத்த தேசமும் மணிப்பூருடன் இணைந்து நிற்கிறது. இவ்வாறு பிரதமர் மோட்டி உரையாற்றினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications