உ.பி. ஆக்ரா அருகே மிக்-29 ரக போர் விமானம் தீ பிடித்து விழுந்து நொறுங்கியது-விமானிகள் உயிர் தப்பினர்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் வயலில் விழுந்து தீ பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 விமானிகளும் பாராசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினர். இரு விமானிகளும் விமான விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் மீட்கப்பட்டனர். இந்த விமான விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் இருந்து பயிற்சிக்காக மிக் 29 ரக போர் விமானம், விமானிகள் இருவருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது உ.பி. ஆக்ரா அருகே வயல்வெளி மீது பறந்த நிலையில் நடுவானில் திடீரென போர் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள் இருவரும் நடுவானில் இருந்து பாராசூட் உதவியுடன் விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். நடுவானில் தீப்பிடிந்த விமானம் வயல்வெளியில் விழுந்து கொழுந்து விட்டு எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து விமானம் விழுந்த இடத்தில் இருந்து 2கிமீ தொலைவில் தரை இறங்கிய விமானிகள் 2 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications