ராகுல் சொல்வதைப் போல அம்பானி - அதானியிடம் ஆதாயம் பெற்றிருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்.. மோடி ஆவேசம்!
டெல்லி: கார்ப்பரேட் நிறுவன அதிபர்களான அம்பானி, அதானி ஆகியோரிடம் நான் எந்த வகையிலாவது ஆதாயம் பெற்றிருந்தால் என்னைத் தூக்கிலிடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் அம்பானி- அதானிக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தமது கோடீஸ்வர நண்பர்களுக்காக ரூ. 1,60,00,00,00,00,000 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார். அதாவது ரூ16 லட்சம் கோடி. இந்த ரூ16 லட்சம் கோடி என்பது என்ன? நாட்டின் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் வழங்கக் கூடிய வேலைவாய்ப்பை தரக் கூடியது இந்த ரூ16 லட்சம் கோடி. நாட்டின் 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் என ரூ16 லட்சம் கோடியை கொடுத்தால் அத்தனை கோடி குடும்பங்களின் நிலைமையையே மாற்றக் கூடியது. - ரூ16 லட்சம் கோடியை கொண்டு 10 கோடி விவசாய குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்திருந்தால் விவசாயிகளின் தொடர் தற்கொலைகளைத் தடுத்திருக்க முடியும். - ரூ16 லட்சம் கோடி மூலமாக ஒட்டுமொத்த தேசத்துக்கும் 20 ஆண்டுகளுக்கு ரூ400-க்கு கேஸ் சிலிண்டரை தர முடியும் எனவும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மோடி பேச்சு: இன்னொரு பக்கம் பிரதமர் மோடியோ, ராகுல் காந்தி திடீரென அம்பானி - அதானி குறித்து பேசுவதை நிறுத்திவிட்டார். ராகுல் காந்திக்கு அம்பானி- அதானி நிறுவனங்கள் டெம்போக்களில் கறுப்பு பணத்தை அனுப்பிவிட்டனரா? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
டெம்போக்களில் பணமா?: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், அம்பானி- அதானி குறித்து ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி பேசித்தான் வருகிறார். அம்பானி- அதானி குறித்து ராகுல் ஏன் பேசாமல் இருக்கப் போகிறார் என கூறியிருந்தார். மேலும், நாட்டின் விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைத்துவிட்ட பிரதமர் மோடி, எத்தனை டெம்போக்களில் பணம் வாங்கினார்? எனவும் குற்றம்சாட்டியிருந்தார் ராகுல் காந்தி.
நேரு குடும்பத்தின் குற்றச்சாட்டு: இந்த நிலையில் இந்தியா டுடே டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பானி- அதானி குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவை டாட்டா பிர்லாவுக்கு ஆதரவானவர் என விமர்சித்தார்கள். இப்போது நேரு குடும்பமே என்னை அம்பானி-அதானிக்கு ஆதரவானவர் என குற்றம் சாட்டுகிறது.
சாதனையாளர்கள்: ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களை அழைத்திருந்தேன். சாதனையாளர்களை கவுரவிக்காமல் மதிப்பளிக்காமல் எப்படி இருக்க முடியும்? அப்படி செய்யாவிட்டால் எப்படி விஞ்ஞானிகளை உருவாக்க முடியும்?
என்னை தூக்கிலிடுங்கள்: நான் தவறு செய்திருந்தால் தூக்கிலிடுங்கள். நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னைத் தூக்கிலிடுங்கள் என்றுதான் சொல்கிறேன். இந்த நாட்டுக்கு வளம் சேர்க்கக் கூடிய தொழிலதிபர்களை நான் மதிக்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலாளர்கள் குறித்து சம அளவில்தான் நான் அக்கறையும் கவலையும் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பணம், நிர்வாக திறன் படைத்தவர்களின் மூளை, தொழிலாளர்களின் கடினமான உழைப்பு ஆகிய அனைத்துமே அவசியமாகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications