'ரேசன் மாஃபியா..'பீட்சா டெலிவரி செய்யலாம்.. ரேசன்பொருள் டெலிவரி கூடாதா?மத்திய அரசை சாடும் கெஜ்ரிவால்
டெல்லி: மத்திய அரசு ரேசன் மாஃபியாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், பீட்சாவை நேரடியாக வீடுகளுக்கு டெலிவரி செய்யலாம் என்றால், ரேசன் பொருட்களை ஏன் டெலிவரி செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் மத்திய அரசுக்கும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். கிட்டதட்ட அனைத்து விஷயங்களிலும் அங்கு மத்திய மாநில அரசுகளுக்கு மோதல் போக்கே நிலவி வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு ரேசன் மாஃபியாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

வீடுகளுக்கு ரேசன் டெலிவரி
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கெஜ்ரிவால் அரசு வீடுகளுக்கே நேரடியாக ரேசன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிவித்தார். ஆனால், இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாததாலும் இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாலும் இதற்கு அனுமதி தர டெல்லி துணை நிலை ஆளுநர் மறுத்துவிட்டார். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வர 2 நாட்களுக்கு முன்னர், இது ரத்து செய்யப்பட்டது.

பீட்சா டெலிவரி vs ரேசன் டெலிவரி
இந்நிலையில், இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு 2 நாட்களே இருந்த நிலையில், மத்திய அரசு இதை ரத்து செய்துள்ளது. பீட்சாவை நேரடியாக வீடுகளில் டெலவரி செய்ய முடியும் என்றால் ஏன் ரேசன் பொருட்களை டெலிவரி செய்யக் கூடாது.

ரேசன் மாஃபியா
ரேசன் மாஃபியாவை தடுக்க முதல்முறையாக ஒரு அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், அதைத் தடுத்துவிட்டார்கள். ரேசன் மாஃபியாவின் தூண்டுதல் காரணமாகவே மத்திய அரசு இப்படிச் செயல்பட்டு வருகிறது. சொல்லப்போனால், இந்தத் திட்டத்திற்கு நாங்கள் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், மத்திய அரசிடம் நாங்கள் 5 முறை அனுமதி பெற்றோம். இத்திட்டம் அமலுக்கு வந்திருந்தால் 72 லட்சம் பேர் பயனடைந்திருப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

மன்றாடிக் கேட்கிறேன்
மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சுட்டிக்காட்டிய முதல்வர் கெஜ்ரிவால், கொரோனா காலத்தில் மாநிலங்களுக்கு உதவுவதற்குப் பதிலாக மத்திய அரசு அரசியல் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். இது குறித்து மேலும் கூறுகையில், "இந்தத் திட்டத்தை மட்டும் அமல்படுத்தவிடுங்கள். இதன் மூலம் கிடைக்கும் புகழை நான் மோடிக்கே கொடுத்து விடுகிறேன். ரேசன் என்பது ஆம் ஆத்மிக்கோ அல்லது பாஜவுக்குச் சொந்தமானது இல்லை. டெல்லியிலுள்ள 70 லட்சம் பேர் பயன்பெறும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்குமாறு நான் மன்றாடி கேட்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications