Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பதவி நீக்கணுமா? நாடாளுமன்றத்தில் கொந்தளித்த அமித்ஷா.. வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛நீதிபதி தீர்ப்பு கொடுத்ததற்காக பதவி நீக்க தீர்மானமா? இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை. வாக்கு வங்கி அரசியலை திருப்திப்படுத்துவதற்காக தான் இந்த பதவி நீக்க தீர்மானம். நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான்'' என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்துக்கு எதிராக அமித்ஷா நாடாளுமன்றத்தில் கொந்தளித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதேபோல் மனுதாரர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

impeachement-notice-against-justice-gr-swaminathan-amit-shah-slams-india-bloc-in-parliament

இதற்கிடையே தான் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தின் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

திமுக எம்பி கனிமொழி திமுக எம்பி டிஆர் பாலு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி உள்பட இன்னும் சில இந்தியா' கூட்டணி எம்பிக்கள் இந்த நோட்டீசை ஓம்பிர்லாவிடம் வழங்கினார்.

அதில் ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று ‛இந்தியா’ கூட்டணியின் 120 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே தான் இன்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் மத்திய அமித்ஷா பதிலளித்து பேசினார். அப்போது நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய ‛இந்தியா' கூட்டணி வழங்கிய நோட்டீசை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக அமித்ஷா பேசுகையில், ‛‛நீதிமன்ற வழக்கில் தோற்றால் உடனடியாக அவர்கள் (இந்தியா கூட்டணி) நீதிபதியை குற்றம்சாட்டுகிறார்கள். தேர்தலில் தோற்றால் உடனடியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குற்றம்சாட்டுகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான அவர்களின் குற்றச்சாட்டுகளை யாரும் கவனிக்காததால் இப்போது ‛வாக்கு திருட்டு' என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்தார் என்பதற்காக அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். நீதிபதி தீர்ப்பு கொடுத்ததற்காக பதவி நீக்க தீர்மானமா? . இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை. வாக்கு வங்கி அரசியலை திருப்திப்படுத்துவதற்காக தான் இந்த பதவி நீக்க தீர்மானம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான். எனவே இந்த நாட்டின் மக்கள் மக்கள் ஒருபோதும் அவர்களுக்கு (இந்தியா கூட்டணி) உதவி செய்ய மாட்டார்கள்'' என்று கொந்தளித்து பேசினார். இதற்கு திமுக உள்பட ‛இந்தியா’ கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டினர். ஆனாலும் அமித்ஷா விடவில்லை. அதன்பிறகு அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+