இம்பீச்மெண்ட் தீர்மானம்.. இதுவரை கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களின் நிலை என்ன?
டெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய உத்தரவு சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்நிலையில், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் தீர்மானத்தை கொண்டு வர கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். இதற்கு முன்னரும் இதேபோன்று மனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் நிலை குறித்து தற்போது பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனில், நாடாளுமன்றத்தில் மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்பிக்களின் ஆதரவு தேவை. இல்லையெனில், மாநிலங்களவையில் 50 எம்பிக்களின் ஆதரவு தேவை. போதுமான எம்பிக்கள் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ் கோரிக்கையில் கையெழுத்து போட்டு, சபாநாயகரிடம் ஒப்படைப்பார்கள். அதன் பின்னர்தான் அவர் இந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க அனுமதி வழங்குவார். பின்னர், விசாரணை குழு அமைக்கப்படும். குழு அறிக்கை கொடுத்து, அதற்கு ஆதரவாக மொத்த எம்பிக்களில் 3ல் 2 பங்கு பேர் ஆதரவு அளித்தால் நீதிபதியை நீக்கிவிடலாம்.

இதற்கு முன்னர் இப்படி எந்த நீதிபதியும் நீக்கப்பட்டதில்லை என்பது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் ஜி.ஆர்.சுவாமிநாதன் அல்லாமல் ஏற்கெனவே இரண்டு நீதிபதிகள் மீது நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு
அதாவது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீப்பிடித்தது. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்கள், நீதிபதியின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணத்தை கண்டெடுத்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நீதிபதிகள் களங்கமற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால், வீட்டில் எப்படி இவ்வளவு பணம் இருந்தது? என்று பாஜகவினர் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமித்த மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு, யஷ்வந்த் வர்மாவை குற்றவாளி என உறுதி செய்தது.
பதவி நீக்க தீர்மானம்
இதனையடுத்து யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக பாஜக எம்பிக்கள் 100க்கும் மேற்பட்டோர் கையெழுத்து போட்டு சபாநாயகரிடம் மனுவை கொடுத்திருந்தனர்.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதியான சேகர் குமார் யாதவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
இந்தியா கூட்டணி கொடுத்த நோட்டீஸ்
கடந்த 2024ம் ஆண்டு விஷ்வா ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றிருந்தார். அதில் அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியிருந்தது. இவரது கருத்துக்கள் நீதித்துறையின் நெறிமுறைகள் மற்றும் மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு முரணாக இருப்பதாக கூறி, இவருக்கு எதிராக மாநிலங்கள் அவையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. "இது இந்துஸ்தான் என்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இந்த நாடு இந்துஸ்தானில் வாழும் பெரும்பான்மையினரின் விருப்பப்படியே செயல்படும் " நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசி இருந்தார்.
ஏற்றுக்கொள்ளப்படாத நோட்டீஸ்
இவருக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல் உட்பட சுமார் 55 மாநிலங்களவை எம்பிக்கள் பதவி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்டு கொடுத்திருந்தனர். இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலம் ஆன நிலையில், மாநிலங்களவை தலைவர் தீர்மானத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை.
ஆனால், நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்தின் மீது கொடுக்கப்பட்ட நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். தற்போது மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications