உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறை.. ஊழியர் நியமனம் - பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு அமல்.. பிஆர் கவாய் அதிரடி
டெல்லி: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஊழிர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறையை தலைமை நீதிபதி பிஆர் கவாய் அமல்படுத்தி உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு என்பது இல்லாத நிலை இருந்தது. தற்போது அந்த நிலை மாறி உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பாக இடஒதுக்கீடு செயல்பாட்டுக்கு கெண்டு வரப்பட்டுள்ளது.
பணி வாரியாக பார்த்தால் பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள், சேம்பர் உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு இடஒதுக்கீடு அமலாக உள்ளது. இதற்கான கொள்கை வரையறைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் பட்டியலின ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 15 சதவீதமும், பழங்குடியின பிரிவினருக்கு 7.5 சதவீத பணியிங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நேரடி ஆட்சேர்ப்பு இடஒதுக்கீட்டு விதிமுறைகளை போல் இந்த இடஒதுக்கீடு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற பணியாளர்களுக்கு இப்படியான இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும்.
இந்த நடைமுறை 2025 ஜூன் மாதம் 23ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி உச்சநீதிமன்றத்தின் அனைத்து பணியாளர்கள் மற்றும் பதிவாளர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதித்துறையின் உள் நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
உச்சநீதிமன்றத்தை எடுத்து கொண்டால் நீதிபதிகள் உள்பட யாருக்கும் இடஒதுக்கீடு என்பது கிடையாது. இதனால் பொதுவாக நீதித்துறையில் பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைப்பது இல்லை என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வருகிறது. தற்போது இந்த இடஒதுக்கீடு முறை என்பது அந்த விமர்சனத்தை உடைக்கும்.
இந்த உத்தரவுக்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தான். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நம் நாட்டின் அனைத்து அரசு நிறுவனங்களிலும், பல உயர் நீதிமன்றங்களிலும் ஏற்கனவே எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு விதிகள் உள்ளன. இதனால் உச்ச நீதிமன்றம் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்? இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது. மேலும் ஒரு நிறுவனமாக அதை பயன்படுத்த வேண்டி உள்ளது நமது நடவடிக்கைகள் நமது கொள்கைகளை பிரதிபலிக்க வேண்டும்'' என்று கூறினார்.
தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் பிஆர் கவாய் கடந்த மே 14 ம் தேதி பொறுப்பேற்றார். வரும் நவம்பர் மாதம் 23ம் தேதி வரை அவர் அந்த பொறுப்பில் இருப்பார். அதன்பிறகு ஓய்வு பெறுவார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இதற்கு முன்பு தலித் சமுதாயத்தை சேர்ந்த கேஜி பாலகிருஷ்ணன் பொறுப்பு வகித்தார். அதற்கு பிறகு 2வது நபராக பிஆர் கவாய் அந்த பொறுப்பை ஏற்றார்.
பிஆர் கவாயின் முழுப்பெயர் பூஷண் ராமகிருஷ்ணா கவாய். இதனை சுருக்கி தான் பிஆர் கவாய் என்று அழைக்கப்படுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்தவர். 1960 நவம்பர் 24ம் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் ஆர்எஸ் கவாய். இவர் அரசியல்வாதியாக இருந்தார். அதோடு பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் செயல்பட்டார். இவர் பீகார், கேரளா ஆளுநராக பணியாற்றி இருந்தார். இப்போது மறைந்துவிட்டார்.
பிஆர் கவாய் கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமகிக்கப்பட்டார். 2005ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி நிரந்தர நீதிபதியானார். அதன்பிறகு 15 ஆண்டுகள் வரை மும்பை, நாக்பூர், அவுரங்காபாத், பானஜி நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டார்.
கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட தொடங்கினர். இப்போது அவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பை வகித்து வருகிறார். இவர் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கிய அமர்வில் பிஆர் கவாய் இடம்பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications