மிக மோசமான 2ஆம் அலை.. வேக்சின் மட்டும் இல்லனா அவ்வளவு தான்.. ஷாக் அடிக்கும் புது தரவுகள்
டெல்லி: கொரோ 2ஆம் அலை மிக மோசமாகச் சென்ற போதிலும், வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் என்பது மிகக் குறைவாகவே இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாடும் முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை. வல்லரசு முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றன.
இந்தச் சூழலில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகள் வேக்சின் பணிகளில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றன.

கொரோனா உயிரிழப்புகள்
அதேநேரம் வேக்சின் ஏற்பட்டாலும் கூட சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால், தடுப்பூசியால் என்ன பயன் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்தச் சூழலில் 2ஆம் அலையில் கொரோனா தடுப்பூசி உயிரிழப்புகளை எந்தளவுக்குத் தடுக்கிறது என்பது குறித்து புதிய தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் மக்கள்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சம் பேரில் பதிவான உயிரிழப்பில் 1121 கொரோனா வேக்சின் எடுத்துக்கொள்ளாதவர்கள் மத்தியில் ஏற்பட்டது.

கொரோனா வேக்சின்
அதேநேரம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மத்தியிலான கொரோனா உயிரிழப்புகள் 2.6ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக 2 டோஸ் கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள் மத்தியிலான உயிரிழப்புகள் 1.76ஆகக் குறைந்துள்ளது. வரும் பண்டிகை காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று வல்லுநர்கள் அஞ்சும் நிலையில், இந்த தரவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா வேக்சின்கள் உயிரிழப்புகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்துவது இதன் மூலம் தெளிவாகா தெரிகிறது.
Recommended Video

எந்தளவுக்குத் தடுத்துள்ளது
இந்திய மக்கள்தொகையில், சுமார் 24% பேர், 60 வயதைக் கடந்தவர்கள் ஆகும். அவர்களில் 10.09 கோடி பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல 5.58 கோடி பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த செப். 9ஆம் தேதி தடுப்பூசிகள் குறித்த பல்வேறு தரவுகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதில் ஒரு டோஸ் தடுப்பூசி 96.6% வரையும், 2 டோஸ் தடுப்பூசி 97.5% வரையிலும் உயிரிழப்புகளைத் தடுப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் தடுப்பூசி போடாதவர்களுக்கும் இடையே உயிரிழப்புகளில் எந்தளவுக்கு வித்தியாசம் உள்ளது என்பது இதில் தெளிவாகத் தெரிகிறது.

குறைந்த உயிரிழப்புகள்
கடந்த ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் மக்கள்தொகையில் 45 முதல் 59 வயதானவர்கள் 10 லட்சம் பேரில் பதிவான உயிரிழப்புகளில் 39.9 தடுப்பூசி போடாதவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மத்தியில் 0.87ஆகவும் 2 டோஸ் கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள் மத்தியில் 0.42ஆகவும் குறைந்துள்ளது. அதேபோல 18 - 44 வயதுடையவர்கள் மத்தியிலான உயிரிழப்புகள் தடுப்பூசி போடாதவர்கள் மத்தியில் 5.6, ஒரு டோஸ் வேக்சின் போட்டவர்கள் மத்தியில் 0.6 மற்றும் 2 டோஸ் வேக்சின் போட்டவர்கள் மத்தியில் 0.1ஆகவும் குறைந்துள்ளது.

வேக்சின் ஏன் முக்கியம்
இந்த சமயத்தில் தான் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தியா திணறி வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 13 பேர் மட்டுமே ஒரு டோஸ் தடுப்பூசியைப் போட்டிருந்தார்கள். அதன் பின்னரே வேக்சின் பணிகள் நாட்டில் வேகம் பெற்றது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 32% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் வேக்சின் போட்டவர்களைக் காட்டிலும் வேக்சின் போடாதவர்கள் மத்தியில் மிக அதிகமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய அரசின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications