இரவில் சிக்னலில் இறங்கிய பெண்.. தரதரவென இழுத்து காரில் ஏற்றிய நபர்.. டெல்லியில் ஷாக்.. பின்னணி என்ன?
டெல்லியில் பரபரப்பான மங்கல்புரி சாலையில் நடந்த சம்பவத்தால் தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டெல்லி: டெல்லியில் பரபரப்பான சாலையில் உள்ள சிக்னலில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க இளைஞர் ஒருவர் இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பின்னணியில் உள்ள ஷாக் தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் கூட ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அரங்கேறி அதிர்ச்சியை அளிக்கின்றன.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் நடக்கும் சம்பவங்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன என்பதை காட்டும் வகையில் இருக்கின்றன. சமீபத்தில் டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டிய சம்பவம் பெரும் ஷாக்கை ஏற்படுத்தியது.

இளம்பெண்ணை தரதரவென இழுத்து
இந்நிலையில் தான் தற்போது டெல்லியில் நடந்த இன்னொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லியில் மங்கல்புரி பகுதியில் பரபரப்பான சாலையில் சிக்னலில் வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு அணிவகுத்த நின்றன. அப்போது இளைஞர் ஒருவர் காரில் இருந்து ஆக்ரோஷமாக இறங்கி அவரது தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்று காரில் கட்டாயப்படுத்தி ஏற்றினார். மேலும் காரின் இருக்கையில் இளம்பெண்ணை தள்ளிய அவர் அவரை பலமாக குத்தினார்.

17 செகண்ட் வீடியோ
அதன்பிறகு சிக்னல் விழவே கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த 17 செகண்ட் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது. தலைநகர் டெல்லியில் இன்னும் கூட பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என பலர் கூறுவதோடு, அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

உபர் காரில் பயணம்
இதையடுத்து டெல்லி போலீசார் வீடியோவின் அடிப்படையில் தாமாக வந்து விசாரணையை தொடங்கினர். வீடியோவில் காரின் பதிவெண் நன்கு தெரிந்த நிலையில் அதனடிப்படையில் விசாரித்தனர். விசாரணையில் அந்த சம்பவம் டெல்லி மங்கல்பூரி சாலையில் நடந்தது தெரியவந்தது. அந்த காரின் உரிமையாளர் குர்கிராமில் வசிப்பதும், கார் உபர் நிறுவனத்தில் வாடகைக்கு விடப்பட்டு இருப்பதும் தெரியவந்து.

யார் அவர்கள்?
மேலும் விகாஷ்பூரி பகுதியை சேர்ந்த ரோஹிணி என்பவர் உபர் காரை புக் செய்த நிலையில் அதில் 2 இளைஞர், ஒரு இளம்பெண் பயணித்ததும் தெரியவந்தது. இந்த வேளையில் காரில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படவே இளம்பெண் கீழே இறங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அவரை மீண்டும் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் கார் டிரைவர், பயணித்த 2 இளைஞர், இளம்பெண் ஆகியோரை போலீசார் தேடி வரகின்றனர். இவர்கள் கிடைக்கும்பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளத என போலீசார் தெரிவித்தனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications