தினசரி டிஜிட்டல் பணபரிவர்த்தனை ரூ.20 ஆயிரம் கோடி! மன் கீ பாத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: ‛‛இந்தியாவில் ஒருநாளைக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடக்கிறது. இதன்மூலம் நேர்மையான முறையில் பணபரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இதை இன்னும் மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி 2014 முதல் ‛மன் கீ பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களில் சேவையை அவர் பாராட்டுவதுன், நாட்டின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அவர் எடுத்து கூறி வருவதை பிரதமர் நரேந்திர மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இன்று மன்கீ பாத் நிகழ்ச்சி
மேலும் சமீபத்தில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசுபவதற்கான சாராம்சத்தை பொதுமக்களிடம் இருந்து அவர் கேட்டிருந்தார். பல்வேறு தரப்பினர் கடிதம் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் இந்த மாதத்துக்கான நிகழ்ச்சியில்(மொத்தம் 88வது நிகழ்ச்சி) இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வழக்கம்போல் பல்வேறு அம்சங்கள் குறித்து நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர்களுக்கான அருங்காட்சியகம்
இந்தியாவில் முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகம் (பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா) அமைக்கப்பட்டது. ஏப்ரல் 14ல் அம்பேத்கரின் பிறந்தநாளில் பிரதமர் அருங்காட்சியகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நாட்டை வளர்ச்சியடைய செய்த பிரதமர்களை கவுரப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இதுபற்றி நாடு முழுவதும் இருந்து மக்கள் கடிதங்கள் எழுதி உள்ளனர். இதன்மூலம் ஒவ்வொரு பிரதமர்களின் பங்களிப்பையும் அறிந்து நாம் பெருமைபடலாம்.

இளைஞர்களுக்கு அறிவுரை
விடுமுறை தினங்களில் இளைஞர்கள் நண்பர்களுடன் அருங்காட்சியகம் செல்ல வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு இளைஞர்களையும் நமது முந்தைய தலைமுறையின் வாழ்க்கையை அறிய முடியும். அருங்காட்சியங்களுக்கு பொதுமக்கள் நன்கொடை அளித்து இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்துக்கு வலு சேர்த்து வருகின்றனர். கொரோனா பரவலுக்கு பிறகு அருங்காட்சியகங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதன்மூலம் கையில் பணமின்றி பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியே நடமாடலாம். இதற்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

டிஜிட்டல் பணபரிவர்த்தனை
தற்போது இந்தியாவில் அனைத்து மக்களும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையை பயன்படுத்தி வருகின்றனர். மார்ச் மாதம் யூபிஐ (UPI) பணபரிவர்த்தனை ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இப்போது சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் வரை டிஜிட்டல் முறை பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கி வருகின்றன. தினமும் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

நீர் பாதுகாப்பு
மாற்றுத்திறனாளிகள் தொடர்ச்சியாக சாதித்து வருகிறார்கள். டோக்கியோ பார ஒலிம்பிக்கில் நம் நாட்டு வீரர், வீராங்கனைகள் சாதித்து்ளனர். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்த தொடர்ந்து நாடு முயற்சித்து வருகிறது. இதற்காக பல ஸ்டார்ட்-அப்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நாடு முன்னேற்றமடையில் நீர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கைக்கும் நீர் அடிப்படை தேவையாகும். இதுபற்றி நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் நீரை சேமித்து பாதுகாக்க வேண்டும்.

பாதுகாப்போடு கொண்டாட்டம்
ஈத் பண்டிகை, அட்சய திருதியை, பரசுராம் ஜெயந்தி, புத்த பூர்ணிமா பண்டிகைகளை கொரோனா விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் மக்கள் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications