தேர்தலில் சிறையில் இருந்தே வென்ற 2 வேட்பாளர்கள்.. எம்பிக்களாக நீடிக்க முடியுமா? என்ன ஆகும் பதவி
டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித் பால் சிங், என்ஜினியர் ரஷீத் லோக்சபா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் எம்பியாக தொடர முடியுமா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலில் சுயேச்சைகள் சிலரும் வென்றுள்ளனர். அதில் பிரிவினைவாத குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித் பால் சிங் மற்றும் என்ஜினியர் ரஷீத் ஆகியோர் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றுள்ளனர். இருவருமே தீவிர குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால் எம்பிக்களாக தொடர முடியுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி திகார் சிறையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் என்ஜினியர் ரஷித் எனப்படும் ஷேக் அப்துல் ரஷித், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
அதேபோல், காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட அம்ரித் பால் சிங் பஞ்சாபில் உள்ள கதூர் சாஹிப் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக நின்றார். என்.எஸ்.ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அம்ரித் பால் சிங்கும் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றார். சிறையில் இருந்தே வெற்றி பெற்றாலும் இவர்கள் எம்பிக்களாக பதவியேற்பது எப்படி? அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள முடியுமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து சில லோக்சபா செயலகம் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்பியாக பதவியேற்க அரசியல் சாசன உரிமை உள்ளது. அதே நேரத்தில் அவர்கள் இருவரும் சிறையில் இருப்பதால் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று போலீஸ் பாதுகாப்புடன் லோக்சபாவிற்கு வர முடியும். பதவியேற்றுக் கொண்டதும் சிறைக்கு திரும்ப வேண்டும்.
அதன்பிறகு ஆர்டிகிள் 101(4) -படி தங்களால் அவைக்கு வர இயலாத சூழல் இருப்பதை சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை அவைக்குழுவிற்கு சபாநாயகர் அனுப்பி வைப்பார். அவைக்குழு இது குறித்து முடிவு செய்யுமாம். தற்போது அவர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு குற்றவாளி என தீர்ப்பு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக இருவரின் எம்பி பதவியும் காலியாகிவிடும்
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications