பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் எப்போது விபத்துக்குள்ளானது?.. அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்து குறித்து மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்றைய தினம் தாக்கல் செய்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த விபத்து நடந்ததும் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நிலை என்னவென தெரியாத நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் பிபின் ராவத், மதுலிகா ஆகியோர் உயிரிழந்ததை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஹெலிகாப்டர் விபத்து
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் 11.35 மணிக்கு புறப்பட்டது. வெலிங்டனை சென்றடைவதற்கு 12 நிமிடங்கள் இருக்கும்போது ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்பு துண்டிக்கப்பட்டதும் விமானம் விபத்துக்குள்ளானது. உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின்படி மீட்பு பணி நடைபெற்றது. உடனடியாக உடல்கள் மீட்டகப்பட்டன.

முப்படைகள் உத்தரவு
ராணுவத்தின் முப்படைகள் சார்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை விமானப்படை மார்ஷல் மனவந்த்ரா சிங் தலைமையில் நடைபெறும். விசாரணை குழு நேற்று வெலிங்டன் சென்றடைந்தனர். அவர்கள் விசாரணையை தொடங்கிவிட்டனர்.

உடல்நிலை மோசம்
குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை மோசமாக உள்ளது. தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து பெங்களூரு கமாண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்.
Recommended Video

உயிர் காக்கும் கருவியுடன் சிகிச்சை
அவருக்கு தற்போது உயிர்காக்கும் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும். அதுபோல் மற்ற வீரர்களின் இறுதிச் சடங்குகளும் ராணுவ மரியாதையுடன் நடைபெறும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications