புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்பிக்கள் பதவியேற்பு இந்திய ஜனநாயகத்தின் புதிய தொடக்கம்- மோடி பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு விடுதலைக்குப் பின்னர் நாம் சொந்தமாக கட்டிய புதிய நாடாளுமன்றத்தில் இன்று புதிய எம்பிக்கள் பதவியேற்பது இந்திய ஜனநாயகத்தில் புதிய தொடக்கம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டு மக்களுக்கு பணியாற்ற மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக வாய்ப்பளித்திருக்கின்றனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

18-வது லோக்சபா கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் தற்காலிக சபாநாயகருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

lok sabha Narendra Modi

பின்னர் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப்புடன் நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:

18-வது லோக்சபா கூட்டம்: சம்பவம் நெ.1.. அரசியல் சாசனத்துடன் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

18-வது லோக்சபா கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. உலகின் மிகப் பெரிய தேர்தல் சுமூகமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதும் கூட. நாடு விடுதலைக்குப் பின்னர் தொடர்ந்து 2-வது முறையாக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற 3-வது முறை வாய்ப்பளித்துள்ளனர். 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டு மக்களுக்கு பணியாற்ற மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக வாய்ப்பளித்திருக்கின்றனர்.

லோக்சபா சம்பவம் நெ.2 : தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்புக்கான அழைப்பை நிராகரித்த டிஆர் பாலு, சுரேஷ்!

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று புதிய தொடக்கம். நாடு விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக நாம் கட்டிய நமக்குச் சொந்தமான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். வழக்கமாக எம்பிக்கள் நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில்தான் பதவியேற்று வந்தனர். புதிய எம்.பிக்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+