18-வது லோக்சபா கூட்டம்: சம்பவம் நெ.1.. அரசியல் சாசனத்துடன் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக "இந்தியா" கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் "அரசியல் சாசன" புத்தகத்துடன் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இன்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து சபை நடவடிக்கைகளை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் நடத்தினார்.

lok sabha india bloc

லோக்சபாவில் இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவியேற்கின்றனர். முதல் நாளான இன்று மகாராஷ்டிராவின் எம்பிக்கள் உட்பட 280 பேர் பதவியேற்கின்றனர். நாளை தமிழ்நாடு எம்பிக்கள் 39 பேர் உள்ளிட்டோர் பதவியேற்க உள்ளனர்.

இன்னொரு பக்கம், நாடாளுமன்ற வளாகத்தில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அகற்றப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் அனைவரும் கைகளில் கையடக்க அரசியல் சாசனப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்தனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+