கணவர் ஒரு ரூபாய் தர வேண்டாம்.. இது என் மாமியாரின் தங்க வளையல்.. கலங்கவைத்த விவாகரத்து வழக்கு
டெல்லி: ‛‛என் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் மற்றும் பண இழப்பீடு என்று எதுவுமே வேண்டாம். விவாகரத்து தந்தால் போதும். திருமணத்தின்போது என் மாமியார் எனக்கு தங்க வளையல்களை பரிசாக தந்தார். அதனை நான் திரும்ப அவரிடம் ஒப்படைக்க வேண்டும்'' என நேர்மயைாக கூறியதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாராட்டினர். மேலும் ‛‛உண்மையிலேயே இது அரிதான வழக்கு. உங்களின் நல்ல பண்பை நாங்கள் பாராட்டுகிறோம். கடந்த காலத்தை மறந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்'' என்று கூறி விவாகரத்து வழங்கியது அனைவரையும் கலங்க வைத்தது.
பொதுவாக தம்பதிகள் விவாகரத்து பெறும்போது கணவன் தரப்பில் இருந்து மனைவிக்கு ஜீவனாம்சம் அல்லது இழப்பீடாக பணம் கொடுக்க வேண்டும். பல வேளைகளில் ஜீவனாம்சம் தொகை, பண இழப்பீட்டை பெண்கள் கேட்கும் வழக்குகளை நாம் கேள்வி பட்டு இருப்போம்.

சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமியிடம் இருந்து பிரிந்த அவரது மனைவி ஹசின் ஜஹானுக்கு கூடுதல் பராமரிப்பு தொகையை கேட்டார். முகமது ஷமி தனது மகளின் பராமரிப்புக்கு மாதம் ரூ.1.50 லட்சம், ஹசின் ஜஹானுக்கு ரூ.2.50 லட்சம் மாதம் வழங்கி வரும் நிலையில் அதனை உயர்த்தி கேட்கப்பட்டது.
இதற்கிடையே தான் நேற்று உச்சநீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு வந்தது. அந்த வழக்கில் பெண் கூறிய வார்த்தையால் உச்சநீதிமன்ற நீதிபதிகளே பாராட்டினர். அதாவது, திருமண பந்தத்தில் இணைந்த ஜோடி கருத்து வேறுபாடால் பிரிந்தனர். இவர்களின் விவாகரத்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் தொடக்கத்தில் பெண் தரப்பு வழக்கறிஞர், ‛‛தனது கட்சிக்காரர் ஜீவனாம்சமோ அல்லது பண இழப்பீடோ கேட்கவில்லை. விவாகரத்து வழங்கினால் போதும்'' என்றார். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் காணொலி காட்சி மூலமாக ஆஜரானார். அப்போது அவர், ‛‛என்னிடம் தங்க வளையல் உள்ளது. அந்த வளையலையும் நான் ஒப்படைக்க வேண்டும்'' என்றார்.
அப்போது பெண் தரப்பு வழக்கறிஞர் ‛‛இந்த தங்க வளையலை எனது கட்சிக்காரருக்கு அவரது மாமியார் வழங்கினார். திருமண பரிசாக மாமியாரிடம் இருந்து இந்த வளையலை பெற்றிருந்தார். இதனால் மீண்டும் அந்த வளையலை ஒப்படைக்க வேண்டும்'' என்று விளக்கினார். இதனை கேட்ட நீதிபதிகள் உண்மையிலேயே இது அரிதான வழக்கு என்று கூறி உடனடியாக விவாகரத்து உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சில முக்கிய கருத்தை பதிவு செய்தனர். ‛‛இதுவரை நாங்கள் சந்தித்த அரிய வழக்குகளில் இதுவும் ஒன்று. விவாகரத்து பெற்று பிரியும் பெண் கணவர் தரப்பில் இருந்து எதையும் கோரவில்லை. அதேபோல் திருமணத்தின்போது அன்பளிப்பாக வழங்கப்பட்ட தங்க வளையல்களையும் திருப்பி கொடுப்பதாக கூறியுள்ளார்.
இந்த வளையல்கள் கணவரின் தாய்க்கு சொந்தமானது என்று எங்களிடம் தெரிவித்து திரும்ப கொடுக்கிறார். உங்களின் நல்ல பண்பை நாங்கள் பாராட்டுகிறோம். கடந்த காலத்தை மறந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்'' என்று பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ன் கீழ் உச்சநீதிமன்றம் அவர்களின் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கியது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications