வெந்து தணியாத சூடான்! உயிரை பிடித்து.. 360 இந்தியர்கள் மீட்பு! 9 தமிழரை உடனே கூட்டி வரும் தமிழக அரசு
டெல்லி: சூடானில் ஏற்பட்டு இருக்கும் உள்நாட்டு போரில் பலர் கொல்லப்பட்டு வரும் நிலையில் அங்கு சிக்கித்தவித்து வந்த இந்தியர்களில் 9 தமிழர்கள் உட்பட 360 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே வெடித்து உள்ள மோதலால் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், குண்டுவீச்சு தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை நடந்த மோதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். 5000 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இந்தியர்கள் பத்திரமாக வீடுகளுக்குள் இருக்குமாறும், வெளியில் வரவேண்டாம் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இந்தியர்களை மீட்க சவூதி அரேபியாவுடன் இணைந்து ஆபரேசன் காவேரி திட்டத்தை மேற்கொண்டது மத்திய அரசு.
இந்த நிலையில் அங்கு சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசும் தேவையான உதவிகளை செய்யும் என்று கூறினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது, "சூடான் நாட்டில் நடைபெற்று வரும் இராணுவம் மற்றும் உள்நாட்டு படைப் பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக. அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்களை மீட்க கோரி அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வருவதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி உடனடியாக அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பகிரக் கோரியும், அவர்களை பாதுகாப்பாக தமிழகம் மீட்க கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பாக கடிதம் மூலம் சூடான் மற்றும் ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், சூடானில் உள்ள தமிழர்களுடன் Whatsapp குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படுகிறது. தற்போது ஒன்றிய அரசின் "ஆப்ரேசன் காவிரி" என்ற திட்டத்தின் மூலமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தாவிற்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் புதுடெல்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
ரஷ்யா - உக்ரைன் போரின் போது, விமானம் மூலம் புதுடெல்லி மற்றும் மும்பைக்கு மீட்கப்பட்ட தமிழர்களை, தமிழ்நாடு அரசின் செலவில் தமிழகத்தில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டது போன்று இந்நேர்விலும் நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சென்னையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறை (Control Room) அமைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்: 011-2419 3100, 9289516711. [email protected] மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்:+91-96000 23645, [email protected]" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சூடானில் சிக்கித்தவித்த 360 இந்தியர்கள் டெல்லிக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு உள்ளனர். சூடானில் இருந்து சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், அங்கிருந்து டெல்லிக்கு திரும்பி இருக்கின்றனர். இந்த 360 பேரில் 9 பேர் தமிழர்கள். அவர்களை இன்று இரவே தமிழ்நாடு அரசு சென்னைக்கு அழைத்து செல்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications