வரி ஏய்ப்பு புகாரின் பேரில் லெனோவா நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
டெல்லி: வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சீனாவைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லெனோவா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, மும்பை மற்றும் குருகிராமில் உள்ள அந்த நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கம்ப்யூட்டர், லேப் டாப், டிவி,மொபைல், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ராகின்ஸ் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிறுவனம் லெனோவா.. இந்நிறுவனத்தின் தலைமையகம் சீனத்தலைநகரான பெய்ஜிங் நகரத்திலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள வட கரொலைனா மாநிலத்தின் மோரிசுவில்லே நகரிலும் அமைந்துள்ளது.

இந்தியாவில் கம்ப்யூட்டர், லேப் டாப், டேப்லெட் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் லெனோவா நிறுவனம் சக்கை போடு போடுகிறது. இந்த நிறுவனத்திற்கு பெங்களூரு, மும்பை மற்றும் குருகிராமில் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் லெனோவா நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் வருமான வரி அதிகாரிகளின் சோதனையை உறுதிப்படுத்திய லெனோவா, அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகவும், தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளது.
ஏற்கனவே வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பதில் புகழ் பெற்ற மற்றொரு சீன நிறுவனமான ஹேயரின் வளாகத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், ஜூலை மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications