எவ்வளவு சான்ஸ் கொடுக்குறது.. ஏமாற்றிய இந்திய வீரர்.. மோசமான ஆட்டம்.. பிசிசிஐக்கு எகிறும் பிரஷர்!
டெல்லி: இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து மூத்த வீரர் ஒருவர் சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இந்தியா நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் தடுமாறிய இந்திய அணி தற்போது 300 ரன்கள் தாண்டி வலுவாக உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சாகா, அக்சர் பட்டேல், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் ஆடும் அணியில் சேர்க்கப்பட்டனர். இதில் ஓப்பனர் மயங்க் அகர்வால் வெறும் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜெமிசன் பந்தில் அவர் அவுட் ஆனார்

புஜாரா
கில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஜெமிசன் பந்தில் போல்ட் ஆனார். அதன்பின் இறங்கிய புஜாரா 88 பந்துகள் பிடித்தவர் 26 ரன்கள் எடுத்த போது சவுதி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ரஹானேவும் பெரிதாக இன்னிங்ஸ் ஆடாமல், 88 பந்துகள் பிடித்தவர் 26 ரன்கள் எடுத்த போது சவுதி பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

ஷ்ரேயாஸ் ஐயர்
இதன் பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் தொடர்ந்து நிதானமாக ஆடி ரன் குவித்து வந்தார். அவரோடு பார்ட்னர்ஷிப் வைத்திருந்த ஜடேஜாவும் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். 112 பந்தில் 50 ரன்கள் எடுத்த ஜடேஜா அவுட்டானார். அதன்பின் வேகம் எடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் இன்று காலை வரை ஆடி சதம் அடித்து 105 எடுத்த நிலையில் அவுட்டானார்.

எதிர்பார்ப்பு
இந்த போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது விர்த்திமான் சாஹாதான். கடந்த சில வருடங்களாகவே இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஹோம் டெஸ்ட் போட்டிகளில் இவர்தான் முதல் விக்கெட் கீப்பர் சாய்ஸ். ஆனாலும் இவர் தொடர்ந்து சொதப்பிக்கொண்டே இருக்கிறார். கடந்த இரண்டு வருடமாகவே இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய ஆட்டம் எதையும் ஆடவில்லை. லோக்கல் போட்டிகளிலும் இவரின் ஆட்டம் சிறப்பாக இல்லை.

இன்றும் மோசம்
இந்த நிலையில் இன்றாவது அவர் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் மோசமாக திணறிய சாஹா 12 பந்து பிடித்து 1 ரன் எடுத்து அவுட் ஆனார். இதனால் பலர் அவரை விமர்சிக்க தொடங்கி உள்ளனர். பல சான்ஸ் கிடைத்தும் சாஹா அதை சரியாக பயன்படுத்தவில்லை. இவருக்கு வயதும் 37 ஆகிறது. இதனால் உடனே இவரை நீக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகிறார். மாறாக கேஎஸ் பரத் சிறப்பாக ஆடுகிறார்.
Recommended Video

கீப்பர்
அவர் நல்ல கீப்பர். லோக்கல் போட்டிகளில் நன்றாக ஆடுகிறார். அதனால் அவரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. சாஹாவை உடனே அணியில் இருந்து நீக்க வேண்டும். அவர் மோசமாக ஆடி வருகிறார் என்று பிசிசிஐ அமைப்பிற்கு பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications