தடபுடல்! ஜனாதிபதி மாளிகையில் கூடிய மோடி உள்ளிட்ட தலைவர்கள்! திரெளபதி முர்மு அசத்தலான விருந்து!
டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு ராஷ்ட்ரிபதி பவனில் இன்று விருந்து வழங்கினார். இதில் துணை ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், வெளிநாடுகளின் தூதர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் நாடு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார். தமிழ்நாட்டில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றினார்.

அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி, ஆளுநர்கள் சார்பில் தேநீர் விருந்து வழங்கப்படுவது வழக்கமாகும்.
தமிழகத்தை பொறுத்தவரை மழை எச்சரிக்கையால் ஆளுநர் ஆர்என் ரவியின் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேநீர் விருந்து மாற்றுத்தேதியில் வைக்கப்பட உள்ளது. மாறாக பிற மாநில ஆளுநர் மாளிகைகளில் தேநீர் விருந்து நடந்தது. இன்று மாலையில் டெல்லி ஜனாதிபதி திரெளபதி முர்மு, அரசியல் தலைவர்கள் உள்பட பல பிரபலங்களுக்கு ராஷ்ட்ரிய பவனில் தேநீர் விருந்து வழங்கினார்.
இதில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் பங்கேற்றார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பிற நீதிபதிகள், வெளிநாடுகளின் தூதர்கள், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். ஜனாதிபதி மாளிகைக்கு வந்த வந்தவர்களை ஜனாதிபதி திரெளபதி முர்மு கைக்கூப்பி வரவேற்பு விருந்து வழங்கினார். முன்னதாக நேற்று மாலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
அப்போது, ‛‛மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். நாம் தனி நபர்கள் அல்ல. மிகப்பெரிய சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த சமூகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களை கொண்டது. ஜாதி, மதம், மொழி மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது. அதுதான் இந்தியன்.
காந்தி உள்ளிட்டோர் நாட்டின் ஆன்மாவை மீண்டும் எழுப்பியதோடு நமது மிகப்பெரிய நாகரிகத்தை எடுத்துரைத்தனர்'' எனபன உள்பட பல்வேறு விஷயங்களை நாட்டு மக்களிடம் பேசினார். அதோடு இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications