லோக்சபா தேர்தல்: பூரிப்பில் "இந்தியா" கூட்டணி..பஞ்சாப்பில் பாஜக சறுக்கல்! டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பின்னுக்கு தள்ளி இந்தியா கூட்டணி வெற்றி வாகை சூடும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 8 - 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜகவை மறுபடியும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை அமைத்துள்ளன.

பாஜகவை ஒரே அணியாக நின்று வீழ்த்தும் திட்டத்துடன் இந்தியா கூட்டணி திட்டம் வகுத்துள்ளது. அதே சமயம் மீண்டும் ஒருமுறை அதாவது 3-வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கட்டிலில் அமர தீவிரமாக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. இதனால், வரும் லோக்சபா தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படு தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் Times Now- ETG Research கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா கூட்டணியே பஞ்சாப்பில் வெற்றி பெறும் என்றும், மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 8 முதல் 11 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:-

பஞ்சாப் மொத்த இடங்கள்: 13
பாஜக கூட்டணி: 1- 3
இந்தியா கூட்டணி: 8 - 11
எஸ்ஏடி: 1 - 2
இதர கட்சிகள்: 0












Click it and Unblock the Notifications