நாசகார திட்டம்.. பாகிஸ்தான் ஸ்பை நெட்வொர்க்கை.. அடியோடு காலி செய்த இந்தியா.. தரமான சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாபில் பாகிஸ்தான் ISI உளவு வலை அமைப்பை இந்தியா கிட்டத்தட்ட காலி செய்து உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் ISI விரக்தியடைந்துள்ளது. இதனால் ISI உளவு மூலம் இந்தியாவை பலவீனப்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

ஆனால் பஞ்சாப் காவல்துறை மற்றும் RAW உஷாராக செயல்பட்டு பாகிஸ்தானின் சதி திட்டங்களை சரியான நேரத்தில் முறியடித்து உள்ளது.

பஞ்சாபில் உள்ள பாகிஸ்தானின் ISI உளவு வலையமைப்பு

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவின் பஞ்சாபில் உளவு பார்த்ததாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் பாகிஸ்தானின் சதித்திட்டங்கள் தொடர்ந்து அங்கே அதிகரித்து வருவதையும், பஞ்சாப் அதன் இலக்காக இருப்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. புள்ளிவிவரங்களின்படி, பஞ்சாப் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI-ன் பார்வையில் உள்ளது உறுதியாகி உள்ளது.

India almost cleared the Pakistan ISI spy network in Punjab with proper intelligence

பஞ்சாப் ISI-ன் வலையமைப்பாக மாறி வருகிறதா? விரிவாகப் பார்ப்போம்...

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் பட்டியல்

1. கஜாலா (மலேர்கோட்லா): ISI ஆபரேட்டருடன் காதல் வலையில் விழுந்து இந்திய ராணுவத்தின் தகவல்களை கசியவிட்டார். திருமண ஆசை + ₹30,000 UPI மூலம் பணம் பெற்று ராணுவ நகர்வுகள் பற்றிய தகவல்களை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தார்.

2. யாமின் முகமது (மலேர்கோட்லா): பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். பாகிஸ்தான் தூதரகத்திற்கும் சென்றுள்ளார். அவர் உளவு வேலையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

3. ஜலக் லயன் (அமிர்தசரஸ்): ராணுவ முகாம் மற்றும் விமானப்படை தளங்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பினார். அவரிடமிருந்து தரவுகள் மீட்கப்பட்டன.

4. சூரஜ் (அமிர்தசரஸ்): பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததற்காக கைது செய்யப்பட்டார். NDPS வழக்கிலும் குற்றவாளி. ISI ஏஜென்ட் ஹர்ப்ரீத் மூலம் பணியில் சேர்க்கப்பட்டார்.

5. முகமது முர்தாஜா அலி (ஜலந்தர்): குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஐஎஸ்ஐ அதிகாரிகளுடன் மேற்கொண்ட தகவல்தொடர்புக்காக சொந்தமாக மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார். பாகிஸ்தானிலிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று செயல்பட்டுள்ளார்.

6. சுக்ப்ரீத் சிங் (குருதாஸ்பூர்): ISI உடன் நேரடியாக தொடர்பில் இருந்தார். ராணுவ தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் மீது ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

7. கரண் (குருதாஸ்பூர்): ISI ஆபரேட்டருடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தார். ராணுவ தகவல்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

8. ககன்தீப் சிங் ககன் (டார்ன் தரன்): இவரது தொலைபேசி மூலம் ISI-ன் 20 ஏஜெண்டுகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் ராணுவ நகர்வுகள் குறித்த அறிக்கையை பாகிஸ்தானுக்கு அனுப்பினார்.

விசாரணை?

உளவு வேலைக்கு UPI மூலம் பணம், திருமண ஆசை, வெளிநாட்டு பயண ஆசை மற்றும் சமூக ஊடக காதல் வலையை ISI பயன்படுத்துகிறது. அதாவது உங்களுக்கு பணம் தருகிறேன் என்று கூறி உளவு பணிக்கு பயன்படுத்துவது ஒரு வகை.. இல்லையென்றால் பெண் உளவு அதிகாரிகளை விட்டு பேசவிட்டு ஹனி டிராப் செய்வது. கைது செய்யப்பட்ட பெரும்பாலானோர் பஞ்சாபின் எல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் பாகிஸ்தான் இன்னும் பஞ்சாபை 'உளவு பார்க்கும் நிலமாக' பயன்படுத்தி வருவது தெளிவாகிறது. ISI இப்போது பெண்கள், வேலையில்லாத இளைஞர்கள், சமூக ஊடகங்களில் தீவிரமாக இருப்பவர்கள் போன்றவர்களை குறிவைத்து செயல்படுகிறது.

பஞ்சாப் காவல்துறையும் உளவுத்துறையும் கூறுவது என்ன?

பஞ்சாப் காவல்துறையின் எதிர் உளவுப் பிரிவு மற்றும் மத்திய அமைப்புகள் உஷாராக உள்ளன. தொலைபேசி, சமூக ஊடக உரையாடல்கள், வங்கி விவரங்கள், மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. அனைத்து வழக்குகளிலும் ரகசிய காப்புச் சட்டம், UAPA மற்றும் IT சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ISI-ன் புதிய ஃபார்முலா

இத்தகைய வழக்குகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல, உளவு வலைகளுக்கும் நிதி மற்றும் ஆதரவு அளிக்கிறது என்பதை காட்டுகிறது.

ISI இப்போது தங்கள் சொந்த நாட்டு உளவாளிகளை இந்தியா உள்ளே அனுப்புவதில்லை. பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்களை ஆசை காட்டி அல்லது மூளைச் சலவை செய்வதன் மூலம் தங்கள் பக்கம் மாற்றுகிறது. ககன் போன்ற இளைஞர்களுக்கு ISI சமூக ஊடகங்களின் வழியாக நட்பு கோரிக்கை அனுப்புகிறது. போலியான கணக்குகள் மூலம் (பெண் ஏஜெண்டுகள் போல) பேசுகிறார்கள். பின்னர் பணம், காதல், உடலுறவு அல்லது வெளிநாட்டு பயணம் போன்ற ஆசை வார்த்தைகள் மூலம் அவர்களை தங்கள் வலைக்குள் விழ வைக்கிறார்கள்.

உளவு பார்ப்பதற்கான காரணம்

இந்திய ராணுவ தளங்களின் தகவல்களை சேகரிக்க
காலிஸ்தான் கருத்துக்களை பரப்ப
மத வழிபாட்டு தலங்களில் அமைதியின்மையை ஏற்படுத்த
சமூக ஊடகங்களில் இந்திய எதிர்ப்பு கருத்துக்களை பரப்ப
தேவைப்படும் போது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உள்ளூர் உதவியாளர்களை உருவாக்க உளவு பணிகளை செய்கிறது.

ISI-ன் சோதனைக்களமாக பஞ்சாப்?

பஞ்சாபில் அமைதியை நிலைநாட்டுவதில் இருக்கும் மிகப்பெரிய சவால் உள்நாட்டு உளவாளிகள்தான். ISI இப்போது வெடிகுண்டுகள் மூலம் அல்ல, மூளைச் சலவை மற்றும் உளவு மூலம் இந்தியாவை உடைக்க முயற்சிக்கிறது.

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியது, இதன் மூலம் ISI விரக்தியில் உள்ளது. இதன் காரணமாகவே இளைஞர்களை குறிவைத்து ஆசை வார்த்தைகள் மூலம் உளவாளிகளாக மாற்றி இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைக்கிறது. இதனை தடுக்க பஞ்சாப் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+