பாகிஸ்தானின் இருதயத்தில் அடித்த இந்தியா.. லாகூரில் பாய்ந்த ஏவுகணைகள்.. கடுமையான அட்டாக்
டெல்லி: பாகிஸ்தானின் இருதயத்தில் அடிக்க தொடங்கி உள்ளது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்னொரு பக்கம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அஜித் தோவல் உள்ளிட்டோருடனும் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முப்பை தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாகிஸ்தான் தாக்குதலையடுத்து மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எல்லையில் நிலவும் சூழல் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் லாகூர் மற்றும் சியால்கோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தானில் ட்ரோன் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
தாக்குதல்
ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல்நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாப்பிலும் பாகிஸ்தான் நடத்த முயன்று இருக்கும் தாக்குதல் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த போகிறது. பாகிஸ்தான் செய்திருப்பது போரின் தொடக்கம்தான். இதற்கு கண்டிப்பாக இனி இந்தியா கடுமையான பதிலடியை தரும். அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடிக்க தொடங்கி உள்ளது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
லாகூரில் உள்ள ஏவுகணை தடுப்பு சிஸ்டங்கள் ஏற்கனவே நொறுக்கப்பட்டுவிட்டது. அங்கே ஏவுகணை தடுப்பு சிஸ்டங்கள் வேலை செய்யாத நிலையில் இந்தியா அங்கே தாக்கி உள்ளது.
நொடிக்கு நொடி பதிலடி
இந்தியாவின் 3 இடங்களில் பாகிஸ்தான் தாக்கியதற்கு உடனுக்குடன் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகள் இந்திய மண்ணை தொடகூடவில்லை. அவை எல்லாம் தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன.
அதற்குள் இந்தியா சார்பாக பதிலடியும் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்தியா சார்பாக லாகூரில் கொடுக்கப்பட்ட அடி மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. சூசைட் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதற்கு இடையே அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவசர அவசரமாக பேசினார். பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு இடையே இந்த ஆலோசனை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் அமைச்சர் ஜெய்சங்கர் அவசரமாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிற்கு போன் அடித்துள்ளார். பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல் குறித்தும், இந்தியா தரக்கூடிய பதிலடி குறித்தும், இதனால் உருவாக உள்ள போர் வாய்ப்புகள் குறித்தும் இவர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications