பொருளாதாரத்தில் ஸ்தம்பிக்க போகும் பாகிஸ்தான்! இந்தியா போட்ட முக்கிய உத்தரவு! உடனடியாக அமலாகிறது
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பொருட்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்திருக்கிறது.
தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த பதிலடி நடவடிக்கையாகத்தான் பாகிஸ்தான் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. அதாவது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதியாகும் எந்த பொருட்களுக்கும் அனுமதி கிடையாது என்றும், மீறி இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக சில பொருட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அப்படி கொடுக்கப்பட்ட அனுமதி கூட ரத்து செய்யப்படுவதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மொத்தம் 3 பேர் இதில் ஈடுபட்டிருப்பதாகவும் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒழுங்காக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஆகவே பல முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
அதன்படி சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த நீரை நம்பி பாகிஸ்தானின் 23 மக்கள் இருக்கின்றன. அதேபோல பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசா அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று பாகிஸ்தான் பொருட்களுக்கு இந்தியா தடை விதித்திருக்கிறது. ஆனால் இந்த தடை அந்நாட்டை பெரிய அளவுக்கு பாதிக்காது என்று சொல்லப்படுகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயும், வாகா-அட்டாரி எல்லை வழியாக வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்தியாவிலிருந்து மருந்துகள், ரசாயனங்கள், பழங்கள், பருப்பு வகைகள் பாகிஸ்தானுக்கும், அங்கிருந்து உப்பு, பேரிச்சம்பழம், வெள்ளி, சர்க்கரை, உலர் பழங்களும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. கடந்த 1996ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்தியா, சிறப்பு அந்தஸ்து ஒன்றை வழங்கியது. 'மோஸ்ட் பார்வேர்ட் நேஷன்' என்கிற அந்தஸ்துதான் அது. தடையற்ற வர்த்தகம், குறைந்த இறக்குமதி வரி இந்த அந்தஸ்து மூலம் கிடைக்கும்.
ஆனால் 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலையடுத்து இந்த அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. மட்டுமல்லாது பாகிஸ்தான் பொருட்களுக்கு 20% வரியும் போட்டது.
கடந்த 2018-2019 காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயும் சுமார் 2.6 பில்லியன் தரப்பில் வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு இது 90% குறைந்தது. இப்போது வர்த்தகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications