உலகில் எந்த நாடும் சந்திக்காத பாதிப்பு.. இந்தியாவில் ஒரே நாளில் 4லட்சம் பேருக்கு கொரோனா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகில் எந்த நாடும் இதுவரை காணாத கொரோனா பாதிப்பை இந்தியா ஒரே நாளில் கண்டிருக்கிறது. உலகிலேயே புதிய உச்சமாக இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 4,01,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3523 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முதல் நாள் காலை 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையிலான கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிடும்.

அந்த வகையில் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, உலகில் எந்த நாட்டிலும் இதுவரை இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது இல்லை. அதாவது 4லட்சம் என்ற பாதிப்பை ஒரு நாளில் பதிவு செய்துள்ளது இந்தியா,

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 4,01,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3523 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் 2,99,988 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

மீண்டவர்கள் எண்ணிக்கை

மீண்டவர்கள் எண்ணிக்கை

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 1,91,64,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1,56,84,406 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 2,11,853 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் தற்போது 32,68,710 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். நாடு முழுவதும் இதுவரை 15,49,89,635 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கர்நாடகா 2வது இடம்

கர்நாடகா 2வது இடம்

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 62919 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 828 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 48296 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 217 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் 37199 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 34372 பேருக்கும், டெல்லிலியல் 27047 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா

ஆந்திரா

தமிழகத்தில் 18692 பேருக்கும், ஆந்திராவில் 17354 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 17411 பேருக்கும், சத்தீஸ்கரில் 14994 பேருக்கும், குஜராத்தில் 14605 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 12400 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் 13833 பேருக்கும், ராஜஸ்தானில் 17155 பேருக்கும், பீகாரில் 15853 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+