துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் நாளை மீண்டும் ஆலோசனை!
டெல்லி: துணை குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று நடைபெற்ற நிலையில் நாளை பகல் 12.30க்கு மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலை காரணமாக பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார். இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்த நிலையில் திடீரென ஜெகதீப் தன்கர் பதவி விலகியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதன்படி, புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். நேற்று நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என இந்தியா கூட்டணியை சேர்ந்த சில கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இந்த நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இந்தியா கூட்டணி சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அலுவலகத்தில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று மாலையும் கார்கே இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிபிஐஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, திமுக எம்.பி கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் யாரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் நாளை கார்கே வீட்டில் ஆலோசனை நடைபெற உள்ளது. நாளை, கார்கேவின் வீட்டில் மதியம் 12.30 மணிக்கு மீண்டும் ஆலோசனைக் கூட்டம் உள்ளது என்று டி.எம்.சி எம்பி டெரெக் ஓ பிரையன் செய்தியாளரிடம் தெரிவித்தார். நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் முழுவீச்சில் ஆலோசனை நடத்தி வருகின்றன. விரைவில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா பெயர் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயருக்கு பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தரப்பில் ஒரு தமிழரை வேட்பாளராக அறிவித்த நிலையில், இந்தியா கூட்டணியும் பாஜகவுக்கு போட்டியாக, தமிழரான திருச்சி சிவாவை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து திருச்சி சிவாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "அது எனக்கு தெரியாது. தலைவர்கள் முடிவு செய்வார்கள்" எனக் கூறினார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications