ஜம்மு காஷ்மீர் தேர்தல்: பாஜகவுக்கு வேட்டு- “இந்தியா” கூட்டணி ஆட்சி அமைக்கும்- Lok Poll பரபர சர்வே!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி, இடதுசாரிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக Lok Poll கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் இந்தியா கூட்டணி 51 முதல் 56 இடங்களிலும் பாஜக வெறும் 23 முதல் 25 இடங்களிலும் வெல்லும் என்கிறது Lok Poll கருத்து கணிப்பு.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18-ந் தேதி 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும். அக்டோபர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக கூறு போடப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது சட்டசபை தேர்தல் இது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டுதான் கடைசியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசுதான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்து இந்த மாநிலத்தையும் 2 கூறுகளாகப் பிரித்தது. ஆகையால் மத்தியில் ஆளும் பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கை மீதான தீர்ப்பாக தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் 370-வது பிரிவு ரத்தை நியாயப்படுத்துகிறது பாஜக. ஆனால் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி (இந்தியா கூட்டணி) மீண்டும் 370-வது பிரிவை அமல்படுத்துவோம்; மாநில அந்தஸ்து பெறுவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பாக Lok Poll நிறுவனம் 22,500 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பின் முடிவில் பாஜகவுக்குதான் தோல்வி கிடைக்கும்; இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lok Poll கருத்து கணிப்பு முடிவுகள்:
இந்தியா கூட்டணி (காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி- இடதுசாரிகள்) 51 முதல் 56 இடங்கள் ( 40% முதல் 42% வாக்குகள்
பாஜக கூட்டணி 23 முதல் 26 இடங்கள் ( 28% முதல் 30% வாக்குகள்)
மக்கள் ஜனநாயகக் கட்சி 4 முதல் 8 இடங்கள் ( 18% முதல் 20% வாக்குகள்)
இதர கட்சிகள் 3 முதல் 7 இடங்கள் 10% முதல் 13% வாக்குகள்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications