ரஷ்யாவிலிருந்து ஒரு நாளைக்கு 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி! அமெரிக்காவுக்கு அஞ்சாத இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் அமெரிக்க கூடுதலாக 25% வரியை போட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை மத்திய அரசு அதிகரித்திருக்கிறது.

அதாவது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பேரல்களாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் இந்தியா நாளொன்றுக்கு 1.6 மில்லியன் அளவுக்குதான் கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தது. ஜூலை மாதம் 1.6 மில்லியன் பேரல்களாக இருந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி ஆகஸ்டில் 2 மில்லியன் பேரல்களாக உயர்ந்துள்ளது.

Russia oil trade

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், ஈராக் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து வாங்கும் எண்ணெயின் அளவு குறைத்துள்ளது. ஜூலையில் 907,000 பேரல்களாக இருந்த ஈராக் எண்ணெய் இறக்குமதி ஆகஸ்டில் 730,000 பேரல்களாகவும், சவுதி அரேபியாவிலிருந்து 700,000 பேரல்களாக இருந்தது 526,000 பேரல்களாகவும் குறைந்துள்ளது. அமெரிக்காவிடமிருந்தும் நாம் எண்ணெய் வாங்குகிறோம். 2,64,000 பேரல்களுடன் எண்ணெய் சப்ளை லிஸ்ட்டில் அமெரிக்கா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக டிரம்ப் கடந்த ஜூலை மாதம் இறுதியில் இந்திய மீது வரியை போட்டார். அதன் பிறகுதான் இந்தியா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது என்பது கவனிக்கத்தது. தற்போது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி சீராக உள்ளது. ஆனால், நிலையாக இருக்குமா என்பது எண்ணெய் கிடைக்கும் அளவை பொறுத்து மாறுபடும். ஆகஸ்ட் மாதத்திற்கான சரக்குகள் ஜூன் மற்றும் ஜூலை மாதத் தொடக்கத்திலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டன.

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் அர்விந்தர் சிங் சானி கூறுகையில், "ட்ரம்ப் விதித்த 25% கூடுதல் வரியால் பயந்துபோய், ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தும் ஐடியா ஏதும் இல்லை. எங்களை வாங்கவும் சொல்லவில்லை, வாங்க வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ரஷ்ய கச்சா எண்ணெயின் பங்கை அதிகரிக்கவோ குறைக்கவோ நாங்கள் கூடுதல் முயற்சி செய்யவில்லை" என்று கூறினார். ஏப்ரல்-ஜூன் மாதங்களில் IOC சுத்திகரிப்பு செய்த கச்சா எண்ணெயில் சுமார் 22% ரஷ்ய எண்ணெய் ஆகும்.

உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளரான இந்தியா, கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்யாவிடமிருந்து சலுகையில் விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு, மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தன. இந்த தடையை தொடர்ந்து ரஷ்யா தனது எண்ணெய்யை குறைந்த விலையில் விற்க முடிவெடுத்தது. இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகிறது.

போருக்கு முன்பு இந்தியாவின் இறக்குமதியில் 0.2% க்கும் குறைவாக இருந்த ரஷ்ய எண்ணெய், இப்போது நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 35-40% ஆக உள்ளது. எனினும், ஒரு பேரலுக்கு $40 ஆக இருந்த தள்ளுபடிகள் கடந்த மாதம் $1.5 ஆகக் குறைந்துவிட்டன. இந்த மாதம் தள்ளுபடிகள் ஒரு பேரலுக்கு $2 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+